tamilnadu

img

திறன்மிகு வகுப்பறைகளுடன் தமிழ்நாடு முதலிடம் - பாஜக ஆளும் மாநிலங்களின் அவல நிலை!

அதிகளவில் திறன்மிகு வகுப்பறைகளுடன் இந்திய அளவில் தம்ழிநாடு முதலிடத்தில் உள்ளது.
2024-25ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 82.5% பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களான மத்தியப் பிரதேசத்தில் வெறும் 7.6% பள்ளிகளிலும், மகாராஷ்டிராவில் வெறும் 4.6% பள்ளிகளிலும், உத்தரப்பிரதேசத்தில் வெறும் 3.6% பள்ளிகளில் மட்டுமே திறன்மிகு வகுப்பறைகள் உள்ளன. இந்த புள்ளி விவரங்களின்படி பார்த்தால் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் நிலை கல்வி தரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.