tamilnadu

img

சமையல் எரிவாயு விற்பனை: தமிழ்நாடு அரசு 55% வரி விதிப்பதாக வதந்தி!

சமையல் எரிவாயு விற்பனையில் தமிழ்நாடு அரசு 55% வரி விதிப்பதாக பரவும் வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. 
சமையல் எரிவாயு விற்பனையில் தமிழ்நாடு அரசு 55 சதவிகிதம் மற்றும் ஒன்றிய அரசு 5 சதவிகிதம் வரி விதிப்பதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. மேலும், சமையல் எரிவாயு ஜி.எஸ்.டி-யின் கீழ் வருகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசு தரப்பில் தலா 2.5% மட்டுமே வரி விதிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.