டிரம்ப்பின் வரிகள் சட்டவிரோதமானவை கூடுதல் வரிகளை நீக்க வேண்டும்: அமெ. நீதிமன்றம்
வாஷிங்டன்,ஆக.31- உலக நாடுகள் மீது டிரம்ப் விதித் துள்ள அதிகப்படியான வரிகள் சட்ட விரோதமானவை எனவும் அவற்றை நீக்க வேண்டும் எனவும் அமெரிக்காவின் கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வாங்காமல் கனடா, ஜப்பான், தென் கொரியா ஐரோப்பிய ஒன்றியம் என அமெரிக்காவின் நட்பு நாடுகள் உட்பட உலக நாடுகளின் மீது டிரம்ப் அதிக பட்சமாக வரிகளை விதித்து உத்தரவிட்டி ருந்தார். இது மிகப்பெரிய வர்த்தகப் போராக மாறியுள்ளது. இந்த வரி விதிப்பு க்குப் பிறகு அனைத்து நாடுகளையும் மிரட்டி அமெரிக்காவில் முதலீடு செய்யும் வகையில் அவற்றுடன் பொருளாதார ஒப் பந்தங்களையும் டிரம்ப் மேற்கொண்டார். இந்நிலையில் டிரம்ப்பின் வரி விதிப்புகளுக்கு எதிராக கடந்த மே மாதம் நியூயார்க் வர்த்தக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று அளித்த தீர்ப்பில், டிரம்ப்பின் பெரும்பாலான வரிவிதிப்பு சட்டவிரோதமானது. கூடுதல் வரி விதிப்பை நீக்க வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கு எதிராகவும் டிரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார். இதை நியாயப்படுத்தவே, தேசிய அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த வரி விதிப்புகள் அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அது வரி விதிப்பில் அந்நாட்டு ஜனாதிபதிக்கு சில அதிகாரங்களை வழங்கி உள்ளது. எனினும் வரம்பற்ற அதி காரம் கொடுக்கப்படவில்லை. அந்த நோக்கத்தையும் நாடாளுமன்றம் கொண் டிருக்கவில்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பானது கிட்டத்தட்ட நியூ யார்க் வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தான் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த நீதிமன்றமானது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அக்டோ பர் 14 வரை கால அவகாசமும் அளித்துள்ளது. இந்த தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தினால் கூடுதல் வரி விதிப்பின் மூலமாக அமெரிக்கா பெற்ற பணத்தை திருப்பித் தர வேண்டிய நிலை கூட ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு டிரம்ப் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அமெரிக்காவுக்கு ஆபத்து என கதை அளந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறி விப்பில் அனைத்து வரி விதிப்புகளும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. இந்த வரிகள் நீக்கப்பட்டால் அது அமெ ரிக்காவுக்கு பேரழிவாக இருக்கும். இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டால் அது அமெரிக்காவை அழித்துவிடும் என்று கூறியுள்ளார்.