மோடி எனது நண்பர் எனப் பேசிய அடுத்த நாளே தாக்குதல் சபஹர் துறைமுகத்தின் மீது தடை விதித்தார் டிரம்ப்
புதுதில்லி, செப். 19 - பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து மோடி எனது நபர் என நட்பு பாராட்டிய டொனால்டு டிரம்ப் இந்தியாவின் பொருளாதாரப் போக்கு வரத்தில் முக்கிய பகுதியாக உள்ள சபஹர் துறைமுகத்தின் மீது தடைகளை விதித்துள்ளார். இந்தியாவுக்கு சாதகமான சபஹர் துறைமுகம் சபஹர் துறைமுகமானது பாகிஸ்தா னை தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான இந்தி யாவின் நேரடியான வர்த்தகத்திற்கு மிக அருகில் உள்ள ஈரான் துறைமுகமாகும். இது திறந்தவெளி கடலாக இருப்பதால் மிகப்பெரிய சரக்கு கப்பல்களையும் இங்கு கையாளக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக அமைந்துள்ளது. எனவே, இந்தியாவும் ஈரானும் இணைந்து இந்த துறைமுகத்தை மேம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த துறைமுக திட்டம் நிறைவேறினால் அது இந்தியாவிற்கு மிகுந்த பலனை தரும். மிகப்பெரிய கடல் - நில வழிப் போக்குவரத்துத் திட்டம் இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான், ரஷ்யா, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே பொருளாதார போக்குவரத் திற்காக 7,200 கி.மீ. தூரத்திற்கு நிலம் மற்றும் கடல் வழியாக உருவாக்கப்படும் சர்வதேச வடக்கு - தெற்கு போக்கு வரத்து வழித்தடத்தின் (INSTC) முக்கிய பகுதி யாக சபஹர் துறைமுகத் திட்டம்உள்ளது. இந்த துறைமுகம் மீது, ஏற்கெனவே அமெரிக்கா தடைகள் விதித்திருந்த நிலையில் டிரம்ப் முதல்முறை ஜனாதிபதி யாக பொறுப்பேற்ற போது 2018-இல் அந்தத் தடைகளை நிறுத்தி வைத்தார். மீண்டும் தடை விதித்த டொனால்டு டிரம்ப் இந்நிலையில் தான், ஈரான் மீது அதிக அழுத்தம் கொடுப்பதற்காக நிறுத்தி வைத்திருந்த தடை உத்தரவை திரும்பப் பெற்று, மீண்டும் தடைகளை போட்டுள்ளார். சபஹர் துறைமுகத்தில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தை மேம்படுத்த இந்தியா சுமார் 1,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது மட்டு மின்றி பல கோடி ரூபாய் மதிப்புள்ள துறை முக மேம்பாடு கட்டுமானப் பணிகளுக் கான உபகரணங்களையும் வழங்கி யுள்ளது. இந்த முனையத்தை இந்தியா வின் கட்டுப்பாட்டில் இன்னும் சில ஆண்டு கள் வைத்திருக்கும் வகையில் 2024 மே மாதம் ஈரானுடன் 10 ஆண்டு ஒப்பந்தத்தை யும் இந்தியா ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மீது தடை விதிப்போமென மிரட்டல் இந்நிலையில் அமெரிக்க வெளி யுறவுத் துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் தாமஸ் பிகோட் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் அரசைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற டிரம்பின் அதிகபட்ச அழுத்தக் கொள்கைக்கு இணங்க, 2018-இல் ஆப்கானிஸ்தான் புனரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஈரான் விடுதலை மற்றும் எதிர்-பரவல் சட்டத்தின் (IFCA) கீழ் வழங்கப்பட்ட தடைகளுக்கான விதிவிலக்கை வெளியுறவுச் செயலாளர் ரத்து செய்துள்ளார். இந்த தடை நடைமுறைக்கு வந்த பிறகு, சபஹர் துறை முகத்தில் செயல்படுபவர்கள் மீதும் தடை கள் பாயும் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த தடைகளின் காரணமாக துறைமுகம் மற்றும் அதனு டன் இணைக்கும் பாதைக் கட்டுமான மேம் பாட்டுப் பணிகள் அனைத்தும் பாதிக்கும். அடிவாங்கும் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கை சபஹர் துறைமுகம் 2023-2024 ஆம் ஆண்டு 60,000க்கும் மேற்பட்ட கொள்கலன் சரக்குகளையும் 1.9 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு சரக்குகளையும் கையாண்டுள் ளது. இது கப்பல் போக்குவரத்தில் 43 சத வீதம், கொள்கலன் ஏற்றுமதி இறக்குமதி யில் 34 சதவீத அதிகரிப்பாகும். இத்தகைய சூழலில் மீண்டும் அத்துறைமுகத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையானது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை க்கு மிக மோசமான பின்னடைவாகும்.