அங்கன்வாடி திட்டத்திற்கான நிதி குறைப்பை தவிர்க்க வேண்டும் சங்கத்தின் திருச்சி மாவட்ட மாநாடு கோரிக்கை
திருச்சிராப்பள்ளி, செப். 27 - தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க 6 ஆவது திருச்சி மாவட்ட மாநாடு சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் மல்லிகா பேகம் தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி வாசித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். வேலை அறிக் கையை மாவட்டச் செயளாளர் சித்ரா வாசித்தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் ராணி சமர்ப்பித் தார். மாநிலத் தலைவர் ரெத்தினமாலா சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, சத்து ணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் அல்போன்சா மேரி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு மாநிலக் குழு செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் களை அரசு ஊழியராக்க வேண்டும். குடும்ப வரன்முறையுடன் கூடிய பென்சன் வழங்க வேண்டும். உயர்நீதி மன்ற தீர்ப்பின் படி பணிக்கொ டையாக ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். அங்கன்வாடி திட்டத்திற் கான நிதி குறைப்பை தவிர்த்து, திட்டத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது. அங்கன்வாடி திட்டத்தையும், குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். அனைத்து அங்கன் வாடி மையங்களுக்கும் 5ஜி செல்போன் களையும், 5ஜி சிம் கார்டையும் வழங்க வேண்டும். காத்திருப்போர் பட்டியலில் உள்ள குறுமைய பணியாளர்களுக்கும் உதவி யாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து அங்கன்வாடி மைய செயல்பாட்டிற்கும் அரசு சொந்த கட்டிடங்களை கட்டிக் கொடுக்க வேண்டும். பிற துறை பணி களில் அங்கன்வாடி ஊழியர், உதவியா ளர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவ ராக ஏ.மல்லிகாபேகம், மாவட்டச் செய லாளராக எஸ். ராணி, மாவட்டப் பொரு ளாளராக பி. சித்ரா உட்பட 17 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநிலப் பொருளாளர் தேவமணி நிறைவுரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைத்தலை வர் மேரிலூர்துராணி வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் சித்ரா நன்றி கூறினார்.
