சின்னியம்பாளையம் தியாகிகளுக்கு வீரவணக்கம்
தொழிலாளர் வர்க்க உரிமைக்கான வீரஞ்செறிந்த போராட்டத்தில் பங்கேற்று, தூக்குகயிற்றை முத்தமிட்டு ஒரே குழியில் விதைக்கப்பட்ட செம்மலர்களாம் சின்னியம்பாளையம் தியாகிகளின் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ். கண்ணன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன், சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர். நடராஜன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி, சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், சிபிஐ மாநிலப் பொருளாளர் எம். ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சி. சிவசாமி, ஏஐடியுசி மாவட்டக் கவுன்சில் செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
