tamilnadu

img

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் வாக்குறுதி போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் முடிவுக்கு வந்தது

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் வாக்குறுதி  போக்குவரத்துத் தொழிலாளர்  போராட்டம் முடிவுக்கு வந்தது

சென்னை, அக். 18 - 62 நாட்களாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வந்த அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து, தங்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். அரசுப் போக்குவரத்துக் கழகங் களில் 1.4.2003-க்கு பின்பு பணிக்கு சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 17 மாத ஓய்வுக்கால பலன் களை வழங்க வேண்டும், ஒப்பந்த நிலு வைத் தொகையை வழங்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணம் உரிய கணக்கில் செலுத்தப்பட வேண்டும்; ஓய்வூதியர் களின் அகவிலைப்படி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனமும், ஓய்வுபெற்றோர் நல அமைப்பும் இணைந்து ஆகஸ்ட் 18 முதல் தமிழகத்தில் 22 மையங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தன.  ஒவ்வொரு மையத்திலும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று போராடி வந்தனர்.

தீர்வு காணுமாறு முதல்வரிடம் முறையீடு

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்,  செப்டம்பர் 1  அன்று, சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசினார். போக்குவரத்து துறைச்செயலாளருடன் 2 முறை, முதலமைச்சரின் முதன்மைச் செய லாளருடன் ஒருமுறை பேச்சுவார்த்தை  நடைபெற்றது. அதில், உடன்பாடு ஏற்படாத நிலையில் காத்திருப்பு போராட்டம் 60 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் நேரடியாக பேசி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்; அவர்களின் காத்தி ருப்புப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென வலி யுறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பி னர்களும் இந்தப் பிரச்சனையை சட்ட மன்றத்தில் எழுப்பினர்.  

தலைமைச் செயலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை

இதையடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங் கர், தொழிற்சங்கத் தலைவர்களை அக்டோபர் 17 அன்று தலைமைச் செய லகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். துறையின் சார்பில் கூடுதல் முதன்மைச் செயலாளர், தலைவர், அலுவலக தனி  அதிகாரி, ஓய்வூதிய காப்பகத்தின் அதிகாரி, சிஐடியு சார்பில் தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச்செய லாளர் கே. ஆறுமுகநயினார், துணைப் பொதுச்செய லாளர் வி. தயானந்தம், சம்மேளன துணைத்தலை வர் கே. அன்பழகன், ஓய்வுபெற்றோர் நல அமைப்பு (ரேவா) பொதுச்செயலாளர் எஸ். குணசேகரன், அரசு விரைவு ரேவா பொதுச்செயலாளர் எஸ். நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர். பொங்கலுக்கு முன்பு கோரிக்கைகள் மீது தீர்வு இதில், ஓய்வுபெற்றோருக்கான 17 மாத ஓய்வுக் கால பலன்கள் 2 தவணைகளில் பொங்கலுக்கு முன்பு வழங்கப்படும்; 15-ஆவது ஊதிய ஒப்பந்த  நிலுவைத் தொகை முதல் தவணை விரைவில் வழங்கப்படும்; 1.4.2003-க்கு பின்பு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் சம்பந்தமாக தீபா வளிக்கு பின்பு தொழிற்சங்கங்களோடு விரிவாக விவாதிக்கப்படும்; 2026 ஜூன் முதல் மற்ற துறை  ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு அமல்படுத்தப் படும் போது, போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்தப்படும்; இதற்கான ஆரம்ப பிரீமி யத்தை போக்குவரத்துக் கழக நிர்வாகமே செலுத்தும்;  தொழிலாளர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப் படும் பணம் உரிய கணக்கிற்கு செல்வதற்கு நடவ டிக்கை எடுக்கப்படும்; ஓய்வுபெற்றோரின் இதர பிரச்ச னைகள் சம்பந்தமாக தொடர்ந்து பேசித் தீர்வு காண லாம் என்று முடிவானது. இதனையடுத்து 62 நாட்களாக நடைபெற்ற காத்தி ருப்பு போராட்டம் சனிக்கிழமைன்று (அக்.18) விலக்கிக் கொள்ளப்பட்டது.

அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று போராட்டம் வாபஸ்!

அ. சவுந்தரராசன் பேட்டி

சென்னையில் அ. சவுந்தரராசன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “கழகங்களின் வரவுக்கும்  செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்கு வது முழுமையாக அமல்படுத்தப்படாமல் உள்ளது.  அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட 8 அரசாணை களை, அரசு நீக்காமல் உள்ளது. இருப்பினும், தற்போது அமைச்சர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்பி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம்” என்றார். “அரசு இயலாமையை கூறுகிறபோது, மக்கள்  பாதிக்கப்படக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சி யோடு தொழிற்சங்கங்கள் கால அவகாசம் தரு கிறோம். இந்த போராட்டத்திற்கு இதர சங்கங்கள் வராதது வருத்தமளிக்கிறது. அரசியல் நிர்ப்பந்தம்,  ஆதாயம் காரணமாக கூட வராமல் இருந்திருக்கலாம்.  ஆனால், மனப்பூர்வமாக ஆதரவு தெரிவித்தார்கள். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரு வதற்கு குரல் கொடுத்த சிபிஎம் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்கள்,  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நிதியுதவி செய்த தோழமை தொழிற்சங்கங்கள், வாலிபர், மாதர், மாணவர் அமைப்புகள் அனைவருக்கும் நன்றி” என்றும் அ. சவுந்தரராசன் கூறினார். “போக்குவரத்துக் கழகங்களைப் பாதுகாக்க வும், பணியில் உள்ள, ஓய்வுபெற்ற ஊழியர்களின் நலன்களைப் காக்கவும் சிஐடியுவும், ஓய்வுபெற் றோர் நல அமைப்பும் (ரேவா) ஒன்றிணைந்து செயல்படும். எதிர்காலத்தில் பிற சங்கங்களையும் இணைத்துக் கொண்டு அனைத்துப் பிரச்சனை களுக்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம்” என்றும் சவுந்தரராசன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தை நிறைவு செய்து அ. சவுந்தரராசன் உரையாற்றினார்.