tamilnadu

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் மறியல் - கைது மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் தொடரும்

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் மறியல் - கைது மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் தொடரும்

கே.ஆறுமுக நயினார் பேட்டி சென்னை, ஆக. 19 - சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்திய அரசு போக்கு வரத்து ஊழியர்களை காவல்துறை யினர் விரட்டி விரட்டி கைது செய்த தால், 3 இடங்களில் மறியல் நடை பெற்றது. பணி ஓய்வுபெற்ற தொழிலா ளர்களுக்கான பணப்பலன்கள், ஊதிய ஒப்பந்த நிலுவை, 12 மாத  அகவிலைப்படி நிலுவை ஆகிய வற்றை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆக.18 அன்று 21 மண்டல அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. தமிழ்நாடு  அரசு போக்குவரத்து ஊழியர் சம்மே ளனம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பும் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியது. பேச்சுவார்த்தை -  நிதி ஒதுக்கீடு இதனை தொடர்ந்து தமிழ்நாடு  அரசு போக்குவரத்து ஊழியர் சம்மே ளன பொதுச் செயலாளர் கே.ஆறு முக நயினார் உள்ளிட்ட தலைவர் களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி யது. அதன்பின் 2023 ஜூலை முதல் 2024 ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு 1137 கோடி ரூபாய் ஓய்வுக்கால பலன்களை வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதுகுறித்து பேசிய கே.ஆறுமுக நயினார், “போராட்டத்தின் காரண மாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இது முன்னேற்றம்தான். இருப்பினும் இதர கோரிக்கைகளை நிறைவேற்ற கால நிர்ணயம் செய்ய  வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” என்றார். இதனை தொடர்ந்து சென்னையை தவிர்த்து பிற இடங்களில் இரவிலும் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மறியல்-கைது பல்லவன் இல்லம் முன்பு செவ்வாயன்று (ஆக.19) காலை  போராட்டத்தை தொடர வந்த தொழி லாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின்  மே தின பூங்கா அருகே ஒன்றுகூடிய தொழிலாளர்கள் பல்லவன் இல்லம் நோக்கி வந்தனர். அண்ணா சாலை பெரியார் சிலை அருகே காவல் துறையினர் தடுத்ததால் மறியல் செய்தனர். காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், கே.ஆறுமுக நயினார் தலைமையில் அண்ணா சாலை அண்ணா சிலை அருகே மறியல் நடந்தது. அவர்களையும் காவல்துறையினர் கைது செய்த னர். இந்த போராட்டங்களில் கைது  செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட் டோரை மண்டபங்களில் அடைத்து வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அ.சவுந்தரராசன், “போ ராட்டம் நடத்திய தொழிலாளர்களை கைது செய்வது மிகவும் தவறு. மீண்டும் மீண்டும் போராடுவோம். போராட்டத்தை காவல்துறையை வைத்து ஒடுக்க முடியாது. எங்களு டைய பணத்தை அரசு கொடுத்தே தீர வேண்டும். அதுவரை போ ராட்டம் தொடரும்” என்றார். கே.ஆறுமுக நயினார் குறிப்பிடு கையில், “2024 மே மாதம் முதல்  ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுக் கால பணபலன், ஒப்பந்த நிலுவைத் தொகை, அகவிலைப்படி நிலுவை மற்றும் உயர்வு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றை தீபாவளிக் குள் வழங்க வேண்டும் என்று கோரு கிறோம். அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற காலக்கெடு நிர்ண யிக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.