tamilnadu

img

சிபிஎம் இடைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்: மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு

சிபிஎம் இடைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்:  மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு 

திருவாரூர், அக். 12-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம், சிபிஎம் மாவட்ட கல்விக் குழு சார்பாக, புலிவலத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு, கட்சியின் மாவட்ட கல்விக்குழு ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட செயற்குழு உறுப்பினருமான கே.ஜி. ரகுராமன் தலைமை வகித்தார். `இந்துத்துவா- வகுப்புவாதம் எதிர்கொள்வது எப்படி’ என்ற தலைப்பில் இரா.சிந்தன், `மார்க்சிய தத்துவம்’ என்ற தலைப்பில் கே. வசந்தன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.  தொடர்ந்து மாவட்ட செயல் திட்டம் குறித்து, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டக் குழு முடிவுகள் குறித்து மாவட்டச் செயலாளர் டி.முருகையன் உரையாற்றினர். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஸ்தாபனக் கடமைகள் குறித்துப் பேசினார்.  இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கந்தசாமி, சி.ஜோதிபாசு, கே.தமிழ்மணி, கே.பி.ஜோதிபாசு, என்.இராதா, பா.கோமதி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.