tamilnadu

img

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மாதர் சங்க திருச்சி புறநகர் மாவட்ட மாநாடு கோரிக்கை

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மாதர் சங்க திருச்சி புறநகர் மாவட்ட மாநாடு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.10 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட 17  ஆவது மாநாடு செவ்வாயன்று துவாக் குடி மலையில் நடைபெற்றது. சங்கத்தின் மூத்த தலைவர் அரசங் குடி ராஜகல்யாணி மாநாட்டு கொடியை  ஏற்றினார். மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் லிங்கராணி தலைமை வகித்தார்.  மாவட்டக் குழு உறுப்பினர் கிரிஜா வரவேற்புரை ஆற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணைச் செய லாளர் விசாலாட்சி வாசித்தார். மாநில  செயற்குழு உறுப்பினர் பவித்ரா துவக்க  உரையாற்றினர். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் கோமதி வாசித்தார். வரவு- செலவு அறிக்கையை மாவட்டக் குழு உறுப்பினர் நித்யா சமர்ப்பித்தார். தீர்மானங்கள் மாநாட்டில், நூறு நாள் வேலை யில் உள்ள குளறுபடிகளை சரி செய்து,  நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை  உடனே வழங்க வேண்டும். நூறு நாள் வேலைக்கு அட்டை பதிந்த அனை வருக்கும் உடனடியாக அட்டை வழங்கி, நூறு நாட்களும் வேலை வழங்க வேண்டும். திருவெறும்பூர், புள்ளம்பாடி, லால்குடி ஆகிய ஒன்றி யங்களில் உள்ள தாலுகா மருத்துவ மனைகளில் மருத்துவ வசதிகளை தரம்  உயர்த்த வேண்டும். பெண் மருத்து வர்களை அதிக அளவில் பணிக்கு அமர்த்த வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்களை உடனடி யாக வழங்க வேண்டும். நுண் நிறுவனங்களின் கடன் அடா வடி வசூலை தடுக்க வேண்டும். தமிழக  அரசு மகளிர் சுய உதவி குழுக்களை அதிகப்படுத்தி கடன்களை எளிய முறை யில் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அதற் கான சட்டத் திருத்தத்தை உடனே  கொண்டு வர வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டத் தலைவராக கவிதா,  செயலாளராக ஏ. மல்லிகா, பொருளாள ராக கே.நித்யா, துணைத் தலைவராக யசோதா, துணைச் செயலாளராக செல்வி உள்பட 17 பேர் கொண்ட புதிய  மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.  புதிய நிர்வாகிகளை அறிமுகப் படுத்தி மாநிலச் செயலாளர் தமிழ் செல்வி நிறைவுரையாற்றினார். வட்டக் குழு துணைச் செயலாளர் தேவிகா நன்றி கூறினார்.