tamilnadu

img

திறந்தவெளி கலை அரங்கம் அமைக்க தமுஎகச மாவட்ட மாநாடு கோரிக்கை

திறந்தவெளி கலை அரங்கம் அமைக்க தமுஎகச மாவட்ட மாநாடு கோரிக்கை

திருவாரூர், செப்.27 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவா ரூர் மாவட்ட 16 ஆவது மாநாடு நன்னி லம் ஒன்றியம், பேரளத்தில் சனிக் கிழமை நடைபெற்றது. மாவட்ட மாநாட்டு பேரணிக்கு  மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜெ. முகமதுஉதுமான் தலைமை ஏற்று  பேரணியை துவக்கி வைத்தார். மாநாட்டு அரங்கத்தில் அமைக்கப் பட்ட கவிஞர் மனிதநேயன் நினைவு கண்காட்சியை மா.சண்முகம் திறந்து வைத்தார். மாநாட்டுக்கு கு. வேதாரத்தனம், சி.செல்லத்துரை, சரஸ்வதி தாயுமானவன் ஆகியோர் தலைமை வகித்தனர். வரவேற்பு குழு தலைவர் தியாகு. ரஜினிகாந்த் வரவேற்புரையாற்றி னார். மாநிலக் குழு உறுப்பினர் சரவ ணன் ஸ்டாலின் துவக்க உரையாற்றி னர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.கே.என்.அனிபா உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்கடேசன் அமைப்பு அறிக்கையும், மாவட்டத் தலைவர் மு.செளந்தரராஜன் பண் பாடு அறிக்கையும், மாவட்டப் பொரு ளாளர் மு.செல்வராஜ் வரவு, செலவு  அறிக்கையும் வாசித்தனர். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் களப்பி ரன் புதிய நிர்வாகிகளை அறிமுகப் படுத்தி நிறைவுரையாற்றினார். முன்னதாக, தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளரும், எழுத்தாள ருமான ஐ.வி.நாகராஜன் எழுதிய ‘தவிப்பு’ கட்டுரை தொகுப்பு வெளி யிடப்பட்டது.  நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில் 41 மாவட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவ ராக மு.செளந்தரராஜன், செயலாள ராக ஜீ.வெங்கடேசன், பொருளாள ராக யு.பொன்முடி ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். தீர்மானங்கள் திருவாரூர் மாவட்டத் தலைநகர மான திருவாரூரில் கலை இலக்கி யம் சார்ந்த திறந்தவெளி அரங்கு அமைத்து தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கையும், மன்னார்குடி அருகேயுள்ள மேல வாசல் கிராமத்தில் 21.10.1931 அன்று  இரட்டை மாட்டுவண்டியில் நூல்களை அடுக்கி கொண்டு அருகி லுள்ள 95 ஊர்களில் முதியோர்களி டம் வாசிப்பு புரட்சியை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதல் நடமாடும் நூலகம் அமைத்தவரும் மேட்டூர் அணை கட்டுமான பொதுப்பணித் துறை பொறியாளருமான சு.வி. கனகசபை பிள்ளைக்கு, தஞ்சை சாலையில் உள்ள மேலவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவ னத்தில் அவரது உருவச் சிலையும்,  அவர் பயன்படுத்திய மாட்டு வண்டி யும் இடம் பெறும் வகையில் மணி மண்டபமும் அமைக்க வேண்டும். இந்திய சுதந்திரப் போராட்டத் தின் போது, தனது தலைமறைவு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மன்னார்குடி அருகே உள்ள மேல நாகையில் தங்கி “பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு” என்ற பாடலை  இயற்றிய மகாகவி பாரதியாருக்கு மேல நாகையில் மணிமண்டபம் அமைத்திட வேண்டும். குடவாசல் கிளை நூலகத்திற்கு அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டும்  பணிகளை தொடங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.