tamilnadu

img

நீர்வரத்துக்கு வழியில்லாத தென்பெண்ணை: கண்ணீரில் விவசாயிகள்

நீர்வரத்துக்கு வழியில்லாத தென்பெண்ணை: கண்ணீரில் விவசாயிகள்

விழுப்புரம், அக்.14- விழுப்புரம் மாவட்டம் காணை, கோணூர் ஆகிய ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்று வரத்து வாய்க்கால்கள் இருந்தும் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. ஆனால், ஏரி வரத்து வாய்க்கால்களில் தண்ணீர் வராமல் விவசாயிகள் கண்ணீரில் மிதந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் காணை, கோனூர் ஏரி பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன் தலைமையில் வட்டச் செயலாளர் ஏ.நாகராஜன், கிளைச் செயலாளர்கள் காணை எல்.துரைராஜ், வைலாமூர் பாபு, மகாலிங்கம், சேட்டு, முருகையன், ஆர்.முருகன், லிங்காதரன், சக்திவேல் ஆகியோர் திங்களன்று (அக்.13) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மாவட்ட மக்கள் குறை கேட்பு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு: கோனூர் பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீரை நம்பி நூற்றுக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும், இந்த ஏரிகளுக்கு விழுப்புரம் அருகே செல்லும் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் நீர்வரத்து வரும் வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கால்கள் மூலம் ஆண்டு தோறும் தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெள்ள நீர் வந்து ஏரிகள் நிரம்பி வருகின்றன. ஆனால், கடந்த சில நாட்களாக சாத்தனூர் அணை நிரம்பி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உபரி நீர் சென்று நேராக கடலில் வீணாக கலக்கிறது. தென்பெண்ண ஆற்றில் இருந்து காணை, கோனுர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து வாய்க்கால்கள் முட்கள் உள்ளிட்ட செடி கொடிகள் அடர்ந்து மூடி மறைத்து இருப்ப தால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் வந்தும் ஏரிகளுக்கு தண்ணீர் வரவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுத்து தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஏரிக ளுக்கு தண்ணீர் வரும் வகையில் வரத்து வாய்க்காலை சீர் செய்து தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனதெரிவித்துள்ளனர்.