tamilnadu

img

கரூர், திருவாரூர் மாவட்டங்களில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

கரூர், திருவாரூர் மாவட்டங்களில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

கரூர், ஜூலை 12-  கரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்டக் குழு கூட்டம், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா ஆகியோர், மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பாலா, கரூர் நகரத்தில் சந்தா சேர்ப்பு இயக்கத்தை துவக்கி வைத்தார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத்தின் எட்டு ஒன்றியங்களிலும் நடத்தப்பட்டு, ஜூலை 10 ஆம் தேதி முதல் தீக்கதிர் சந்தா சேர்ப்பு துவக்கப்பட்டது.  கரூர் நகரத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, நகரச் செயலாளர் எம். தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். ஹோச்சிமின், எஸ்.பி. ஜீவானந்தம், எம். சுப்பிரமணியன், கெ. சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கரூர் ஒன்றியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ஜீவானந்தம், ஒன்றியச் செயலாளர் சி.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.ராஜேந்திரன், எஸ். பூரணம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அ. காதர்பாட்சா, வேலு, கட்சி கிளைச் செயலாளர்கள் நடராஜன் டிஎன்பிஎல் அரவிந்த், புகலூர் நகர மன்ற உறுப்பினர் இந்துமதி அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.  க. பரமத்தி ஒன்றியத்தில், மாவட்டக் குழு உறுப்பினர் கா.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் குப்பம் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கடவூர் ஒன்றியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் பி.பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். தோகைமலை ஒன்றியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. சக்திவேல், ஒன்றியச் செயலாளர் ஏ. சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். அரவக்குறிச்சி ஒன்றியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஆர். ராஜா முகம்மது, ஒன்றியச் செயலாளர் எம். ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  குளித்தலை ஒன்றியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. ராஜூ, ஒன்றியச் செயலாளர் இரா. முத்துச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் ஜி. தர்மலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர் வக்கீல் சரவணன் ஆகியோர் சந்தா சேகரித்தனர். கரூர் மாவட்டத்திற்கு தீக்கதிர் நாளிதழ் சந்தா சேகரிக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விரைவில் முடிப்பதற்கு, தீவிர சந்தா சேகரிப்புப் பணியில் கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.  திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா பதிவு ஜூலை 10 ஆம் தேதி துவங்கி எழுச்சியாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களிலும், 6 நகரங்களிலும் தீக்கதிர் ஆண்டு சந்தா பதிவு இயக்கம் சார்பாக விவசாய பெருங்குடி மக்கள், விவசாய தொழிலாளர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் கட்சி தோழர்கள் இல்லம் தேடிச் சென்று, தீக்கதிர் சந்தா பதிவை மேற்கொள்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் ஒன்றியத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா தலைமையில் நடைபெற்ற சந்தா பதிவு இயக்கத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், தீக்கதிர் சந்தா பதிவை துவக்கி வைத்தார்.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் இரா. மாலதி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இதேபோல் மாவட்டம் முழுவதும் நடைபெறும் சந்தா பதிவு இயக்கத்தில் அந்தந்தப் பகுதி கட்சி ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் தலைமையில், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.