tamilnadu

img

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் காதணி விழாவில் தீக்கதிர் சந்தா வழங்கல்

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

தஞ்சாவூர், ஜூலை 20 - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியக் குழு சார்பில், ஆண்டுச் சந்தா - 4,  அரையாண்டு சந்தா-6 ஆகியவற்றை ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ், தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என். பாண்டியிடம் வழங்கினார். மதுக்கூர் ஒன்றியக் குழு சார்பில், ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் 13  சந்தாக்களுக்கான தொகையையும், பட்டுக் கோட்டை ஒன்றியக் குழு சார்பில், மொத்தம்  10 சந்தாக்களுக்கான தொகை ரூ.36 ஆயி ரத்தை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி யும், திருவோணம் ஒன்றியக் குழு சார்பில், 15  சந்தாக்களுக்கான தொகையினை ஒன்றி யச் செயலாளர் எஸ்.பாஸ்கரும், பேரா வூரணி ஒன்றியக்குழு சார்பில், 4 அரை யாண்டு, ஒரு ஆண்டுக்கான சந்தாவை, ஒன்றியச் செயலாளர் வே.ரெங்கசாமியும், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு சார்பில் 9  அரையாண்டு, 2 ஆண்டுக்கான சந்தாவை,  ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில் குமாரும் தீக்கதிர் முதன்மை பொது மேலா ளர் என்.பாண்டியிடம் வழங்கினர். நிகழ்வுகளில், சிபிஎம் மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், தீக்கதிர் பொறுப்பாளரும், மாவட்டச் செயற்குழு உறுப்பினருமான ஆர்.மனோகரன், மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப் பினர்கள், மூத்த தோழர் வீ.கருப்பையா மற்றும் அந்தந்த பகுதி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர், ஜூலை 20 - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. ஆண்டிமடம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து தீக்கதிர் சந்தா சேர்க்கப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.பரமசிவம், ஆண்டிமடம் வட்டச் செயலாளர் எம்.வேல்முருகன், மூத்த நிர்வாகிகள் ஜி.பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை, ஜூலை 20 - மயிலாடுதுறை மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக 20  தீக்கதிர் ஆண்டு சந்தாவிற்கான தொகையை மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலக் குழு உறுப்பினரும், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளரு மான ஐ.வி.நாகராஜனிடம், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், ஜி.ஸ்டாலின், தீக்கதிர் மயிலாடு துறை மாவட்ட பொறுப்பாளர் கே.பி.மார்க்ஸ், அமுல் காஸ்ட்ரோ ஆகியோர் உடனிருந்தனர்.

நன்னிலத்தில் சிபிஎம் சிறப்பு பேரவை

திருவாரூர்,  ஜூலை 20 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்தில் அனைத்து கிளைகளிலும் தீக்கதிர் நாளிதழ் கொண்டு செல்வதையும் உறுதி செய்யும் வகையில், சிபிஎம் நன்னிலம் ஒன்றியக்குழு சார்பாக சிறப்பு பேரவை ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு நன்னிலம் ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கட்சி கிளைகளுக்கும் தீக்கதிரை கொண்டு செல்ல வேண்டும்.  ஜூலை 24 ஆம் தேதிக்குள் தீக்கதிர் ஆண்டு சந்தா இலக்கை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.தமிழ்செல்வி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பேரவையில் கொல்லுமாங்குடியைச் சேர்ந்த தினேஷ், வெங்கடேஷ் என இரு இளைஞர்கள் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தியாகு ரஜினிகாந் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

அறந்தாங்கி, ஜூலை 20 - புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தில் தீக்கதிர் நாளிதழுக்கு 20 ஆண்டு சந்தாக்கள் சேர்க்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்டார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜனார்த்தனன், ஒன்றியச் செயலாளர் ஆர்.வி. ராமையா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம். மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.வாசுதேவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.அடைக்கப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.