கறம்பக்குடியில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
புதுக்கோட்டை, ஜூலை 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றியக்குழு சார்பில், தீவிர தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி. அன்புமணவாளன், அ. மணவாளன், எம். பாலசுந்தரமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஏ.லாசர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் எம்.வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.