tamilnadu

வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது! அமைச்சர் நாசர் திட்டவட்டம்

வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது!  அமைச்சர் நாசர் திட்டவட்டம்

சென்னை, செப். 27 - புதிய வக்பு திருத்தச் சட்டத்தை ஒன்றிய  பாஜக அரசு நடைமுறைப்படுத்திய நிலை யில், தமிழ்நாடு வக்பு வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என அமைச்சர் நாசர்  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “1995 ஆம் ஆண்டு வக்பு சட்டத்தினை ஒன்றிய அரசு திருத்தம் செய்து, ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதி காரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம் பாட்டுச் சட்டம் 1995-ஐ ஏப்ரல் 8, 2025 அன்று  நடைமுறைப்படுத்தியது” என்று கூறப்பட்டு உள்ளது. இச்சட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்ததாகவும், பல்வேறு தரப்பினரும் இச்சட்டத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் என்றும் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் செப்.15 அன்று இடைக்கால தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால், இறுதி தீர்ப்பு வரும் வரை ஒன்றிய அரசு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்திய புதிய வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரி யம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.