tamilnadu

img

கழிவுகள் தேங்குவதால் துர்நாற்றம் காய்கறி சந்தையின் அவல நிலை!

கழிவுகள் தேங்குவதால் துர்நாற்றம் காய்கறி சந்தையின் அவல நிலை!

கோவை, செப்.24- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா காய்கறி சந்தையில் முறையாக தூய்மைப் பணிகள்  மேற்கொள்ளாததாலும், மழை நீர் தேங்குவதாலும் வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில்  சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வெங்கா யம், காய்கறிகள் இங்கு சில்லரை விற்பனை செய்யப் படுகிறது. ஒவ்வொரு முறையும் மழை காலங்களில் சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்குவதால் வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று இரவு கோவையில் பெய்த திடீர் மழையால் அண்ணா காய்கறி சந்தை வளாகத்தின் முகப்பு பகுதியில் கழிவு நீருடன் கலந்து மழை நீர் நின்றதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தகவலறிந்து வந்த  மாநகராட்சி ஊழியர்கள் சந்தை வளாகத்தில் தேங்கிய  குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி அப்பகுதியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், பல  ஆண்டுகளாகவே அண்ணா காய்கறி சந்தை இதே மோச மான நிலையில் உள்ளது. தினமும் கழிவுகளை எடுக்க யாரும் வருவதில்லை, மாதம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வந்து கழிவு களை அகற்றுகிறார்கள். இதன் காரணமாக கடுமை யான துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும் காய்கறி வாங்க வர யோசிக்கிறார்கள். தினமும் தூய்மைப் பணி களை மேற்கொண்டு மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து பேசிய சுமை தூக்கும் தொழிலா ளர்கள், மழைக்காலங்களில் காய்கறி மூட்டைகளை சுமந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. கழிவு நீர் கலந்த சேற்றில் இறங்குவதால் நோய் தொற்றுகள் ஏற்படுகிறது. மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பணியாற்றக் கூடிய சூழல் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.  ஒருபுறம் மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா  கோவில் அருகே மேம்பாலப் பணிகளால் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், சாலை ஓரத்தில் உள்ள காய்கறி சந்தையும் கழிவுகளால் சூழப்பட்டு மோசமான கோலத்தில் காட்சியளிப்பதோடு, துர்நாற் றம் வீசி வருகிறது. இதனால் அடிக்கடி நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளதால், நிரந்தர தீர்வு காண  தினமும் மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் அமைக்க வேண்டும் என்பதே காய்கறி சந்தை  வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை யாக உள்ளது.