விஜய்யின் பாதுகாப்பு விளக்கம் கேட்கும் ஒன்றிய அரசு
சென்னை, அக். 2 - நாட்டில் உள்ள அர சியல் கட்சித் தலைவர் கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங் களுக்கு உளவுத் துறை யின் அறிக்கையின் அடிப் படையில் ஒன்றிய அரசு பல்வேறு பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்கு கிறது. அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் முதல் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஒன்றிய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங் கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செப்ட ம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில், விஜய்யின் பாது காப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.