சுடுகாட்டிற்காக அலைக்கழிக்கப்படும் அருந்ததியர் மக்கள்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர், ஆக.13 - கரூர் அருகே உள்ள காருடையம் பாளை யம் அருந்ததியர் மக்கள் பல தலைமுறை களாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அபகரித்து அவர்களை விரட்டி அடித்துள்ளனர். அருந்த தியர் மக்களின் உரிமையை பாதுகாக்கா மல் பல கிலோ மீட்டர் தூரத்தில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கி தீண்டாமைக்கு துணை போகும் மாவட்ட நிர்வாகத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டித்து புகளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், காரு டையம்பாளையத்தில் கிழக்கு தெருவில் 58 அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வரு கிறார்கள். இவர்கள் கரூர் -கோவை சாலை யில் உள்ள காருடையம்பாளையம் பேருந்து நிறுத்தத்துக்கு கிழக்குப் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் சர்வே எண் 100இல் பல தலைமுறைகளாக சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு இறந்தவரின் உடலை எரிப்பதற் காக கொண்டு போன போது, சுடுகாட்டின் அருகே நிலம் வைத்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சூரியம் பாளையத்தை சேர்ந்த நாட்ராயன் மகன் கார்த்தி என்பவர் இங்கு பிணத்தை எரிக்கக் கூடாது என்று தடுத்து நிறுத்தி எங்களை அடித்து விரட்டி யிருக்கிறார். அதன் பின்பு பிணத்தை எரிக்க முடியாமல் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாமக்கல் மாவட்டம், வேலூரில் இருக் கும் மின் மயானத்தில் இறந்தவரின் உடலை எரியூட்டியிருக்கிறார்கள். அதற்கு பின்பு பழனியம்மாள் என்பவர் இறந்த போது இறந்தவரின் உடலை எரிப்ப தற்காக சுடுகாட்டுக்கு கொண்டு சென்ற போது, கரூர் மாவட்ட நிர்வாகம், காவல் துறையை வைத்து தடுத்து நிறுத்தியது. இதனை கண்டித்து இறந்தவரின் உடலை சாலையில் வைத்து காருடையம் பாளை யம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு பேச்சு வார்த்தை நடத்தி, மீண்டும் அதே இடத்தில் இறந்தவரின் உடலை எரிப்பதற்கு அனுமதி அளித்துள்ளனர். அதன் பின்னர் எப்போதெல்லாம் ஊரில் இறப்பு நிகழ்கிறதோ அப்போதெல்லாம் காவல் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்திக் கொண்டு, இறந்தவர்களின் உடலை சுடுகாட்டில் எரிக்க விடாமல் போலீ சாரை குவித்து அருந்ததிய மக்களை மிரட்டி 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாமக்கல் மாவட்டம், வேலூரில் இருக்கும் மின் மயானத்தில், இறந்தவர் உடலை எரியூட்ட காவல்துறையின் பாதுகாப்புடன் கொண்டு சென்ற பிறகே காவல்துறை அந்த ஊரை விட்டு சென்றிருக்கிறது. இவ்வளவு மோசமான அடக்குமுறையை காவல் துறையை கொண்டு, அருந்ததியர் மக்க ளுக்கு எதிராக நடந்து கரூர் மாவட்டம் நிர்வா கம் தீண்டாமையை நிலை நிறுத்தி வரு கிறது. 2023 ஆம் ஆண்டு கரூர் மாவட்ட ஆட்சிய ராக இருந்த த.பிரபுசங்கர், சர்வே எண் 67 இல் வண்டிப் பாதையாக இருந்த இடத்தை அருந்ததியர் மக்களுக்கு மயானமாக நில வகைப்பாடு மாற்றம் செய்து 14.10.2023 அன்று உத்தரவிட்டார். ஆனால், காருடையாம் பாளையம் ஊராட்சி மன்றக் கூட்டத்தில், அருந்ததியர் மக்கள் சர்வே எண் 67 இடத்தை சுடுகாடாக பயன்படுத்த கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டடது. இதனால், பல தலைமுறைகளாக பயன் படுத்தி வந்த கரூர் - கோவை சாலையில் சர்வே எண் 100 இல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று அருந்த திய மக்கள் கேட்ட போது, தற்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், நாங்கள் குடி யிருக்கும் பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் சர்வே எண் 557 இல் சுடுகாடு இடம் ஒதுக்கி 22-2-2024 அன்று உத்தரவிட்டார். இதனால் இறந்தவர்களின் உடலை மூன்று கிலோமீட்டர் தூரம் தூக்கிக் கொண்டு செல்ல முடியாத நிலையில் அருந்ததிய மக்கள் உள்ளனர். இப்பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி செவ்வாயன்று போராட்டத் திற்கு தயாரான போது வேலாயுதம்பாளை யம் காவல் ஆய்வாளர் போராடு வதற்கு அனுமதி இல்லை என்று கூறி தடை விதித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும், அறிவித்தபடி, தீஒ முன்னணி சார்பில், வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் கெ. சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா. முத்துச்செல் வன், கரூர் ஒன்றியச் செயலாளர் சி.முரு கேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.கந்தசாமி, ப.சரவணன், எம்.ராஜேந்திரன், சிஐடியு சங்க மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணி யன், க.பரமத்தி ஒன்றிய செயலாளர் குப்பம் கா.கந்தசாமி, தீஒமு மாவட்டப் பொருளா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஊர் பொது மக்கள் சதீஸ், தேவராஜ், தங்கராஜ், நாக ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.