tamilnadu

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு பேரெழுச்சியுடன் துவங்கியது

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு பேரெழுச்சியுடன் துவங்கியது

தீண்டாமை ஒழிப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான பங்கு பாராட்டுக்குரியது

தீண்டாமை ஒழிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மகத்தான பங்கு பாராட்டுக்குரியது என்று கட்சித் தலை வர்கள் கூறினர். மயிலாடுதுறையில் துவங்கிய தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாட்டில் நான்கு முக்கிய கட்சித்  தலைவர்கள் கலந்துகொண்டு சாதிய ஒழிப்பு மற்றும் சமூக நீதி குறித்து கருத்து களை வெளியிட்டனர். அருந்ததியர் இட ஒதுக்கீட்டு வரலாறும் மார்க்சிஸ்ட் கட்சியின் பங்கும் ஆதித்தமிழர் பேர வையின் தலைவர் இரா.அதியமான் உரையில், அருந்ததி யர் மக்களை ஒருங்கி ணைத்து செயல் படும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பணியை பாராட்டினார். “ஒரு காலத்தில் இந்த மாநாடு  நடைபெற்ற இடம் சாணிப் பால், சவுக்கடி  கொடுத்த இடமாக இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டளையை ஏற்று மகத்தான தலைவர் பி.சீனிவாச ராவ் இந்த பகுதியில் குடும்பத்துடன் வந்து களம் கண்டு மாற்றத்தை ஏற்படுத்தினார். இதனை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும்  மறக்கக் கூடாது” என்று நினைவு கூர்ந்தார். தமிழகத்தில் சாதியை எதிர்த்து தீண் டாமை ஒழிப்பு முன்னணி களம் காண்பதில்  உத்தபுரம் சுவர் உள்ளிட்ட பெரிய பட்டி யலே நீண்டு செல்வதாகவும் அவர் குறிப் பிட்டார். “அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத இட  ஒதுக்கீடு வேண்டும் என்பது 30 ஆண்டு கால கோரிக்கை. நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம், ஆட்சியாளர்களுக்கு எட்டவில்லை. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இந்த கோரிக்கையை முன் னெடுத்து போராட்டத்தை நடத்தி களம்  கண்டது. அப்போதைய மாநிலச் செயலாள ரான தோழர் என்.வரதராஜன் எங்களை அழைத்துச் சென்று முதல்வர் கலைஞரி டம் பேச வைத்தார். அதன் பிறகும் உள் ஒதுக்கீடு கேட்டு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின் விளைவாக 3 சதவீத இட ஒதுக்கீடு அருந்த திய மக்களுக்கு கிடைத்தது” என்று வெற்றி கரமான போராட்ட வரலாற்றை விவரித் தார். “சாதி மறுப்பு திருமணம் செய்தவர் களுக்கு சாதியற்றோர் என வகைப்பாட்டை  உருவாக்கி சான்று வழங்கி அவர்களுக்கு வேலை, கல்வி உள்ளிட்ட அனைத்திலும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று முக்கிய கோரிக்கை வைத்தார்.

சாதி மறுப்பு திருமணத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு

தமிழ்ப்புலிகள் கட்சி யின் தலைவர் நாகை.திருவள்ளுவன், “மனித குலத்திற்கும் நாட்டின்  வளர்ச்சிக்கும் எதிரா னது சாதியம். தீண்டா மைக்கு எதிராக போராடுவது எளிதல்ல. அத்தகைய பணியை தீண் டாமை ஒழிப்பு முன்னணி சிறப்பாக செய்து  வருகிறது” என்றார். “சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ப வர்கள் எங்கே செல்வது; யார் நமக்கு அடைக்கலம் தருவார்கள் என்று பரிதவிக் கும் இக்காலத்தில் சிபிஎம் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் ஒரு முக்கியமான -  அவர்களுக்கு ஆதரவான செய்தியை கூறி யுள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகங்களுக்கு வரலாம். அவர் களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அடைக்கலம் கொடுக்கும், ஆதரவாக இருக்கும் என்று சொன்னது மிக முக்கிய மான செய்தி” என்று சண்முகத்தின் கருத்தை மேற்கோள் காட்டினார். “பல்வேறு அமைப்புகள் உள்ளன. ஆனால் களத்திற்கு வந்து முதலில் போராடு வது தீண்டாமை ஒழிப்பு முன்னணிதான்.  சாதியை பாதுகாக்க பலர் கிளம்பியிருக் கிறார்கள். சாதி வேண்டும் என்று சொன்ன வர்கள் கூட சாதி மறுப்பு திருமணம் செய்துள்ளனர். சாதியை தூக்கிப் பிடித்துக் கொண்டு சில தமிழ் தேசியவாதிகள் கத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்  சாதி ஒழிப்பு தான் தமிழ்த் தேசியத்தின் அடை யாளம்” என்று நாகை.திருவள்ளுவன் வலி யுறுத்தினார்.

போராட்டக் களத்தில் முன்னணியின் பங்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ, “தீண்டாமைக்கு எதி ரான போராட்டக் களங்க ளில் யாராவது தோழமை இயக்கங் கள் வரமாட்டார்களா என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது  தீண்டாமை ஒழிப்பு முன்னணி தக்கசமயத் தில் வந்து தோள்கொடுக்கும். முன்ன ணியின் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜும் முன்னணியினரும் வந்த  பின்னர் எங்களுக்கும் அந்த போராட் டத்திற்கும் புதிய தெம்பு கிடைக்கும்” என்றார்.  

பாட்டாளி வர்க்கத்தை முனைப்புடன் களமாட வைப்பது மார்க்சியம் தான்

மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவர்  சு.க.முருகவேல் ராஜன், “நாங்கள் பிறக்கும்போதே மார்க்சிஸ்ட், அம்பேத் காரிஸ்ட்கள்.  நீங்கள் எதை ஒழிக்க வேண்டும்  என மாநாடு நடத்துகிறீர்களோ, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள் ஓடுவதற்கு எழுத வேண்டி இருக்கு, மக்களை திரட்ட வேண்டி இருக்கு, போராட வேண்டி இருக்கு.  ஒவ்வொரு நாளும் உயிர் வாழ்வதற் காகவே போராட வேண்டியுள்ளது”  என்று உணர்வுப்பூர்வமாக தொடங்கினார். “நான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் ஆக்கப்படாத உறுப்பினர். பாட்டாளி  வர்க்கத்தை முனைப்புடன் களமாட வைப்பது மார்க்சியம் தான். இந்தப் பாட்டாளி வர்க்கத்தின் இயக்க செயல் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதுதான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சரியான பாதை” என்றார்.