மசோதாக்களைக் காலாவதியாக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை
புதுதில்லி, செப். 2 - “மசோதாக்களைக் காலாவதி யாக்கும் அதிகாரம் ஆளுந ருக்கு இல்லை; தேவைப்படும் பட் சத்தில், அந்த அதிகாரமும் சட்டமன்றத்திற்கே உள்ளது” என உச்சநீதிமன்றத்தில் தமி ழ்நாடு அரசு வாதிட்டுள்ளது. மசோதாக்களுக்கு 1 மாதத் திற்குள் ஆளுநர்களும், 3 மாதத் திற்குள் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று காலவரம்பு நிர்ணயித்த விவ காரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இதில், தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபி ஷேக் மனு சிங்வி வாதிட்டார். அப்போது, “மசோதாக்க ளைக் காலாவதியாக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. தேவைப்பட்டால் மசோதாவை காலாவதியாக்கும் அந்த அதிகாரமும் சட்டமன்றத்துக்கே உள்ளது” என்றார். ஆளுநர் தன்னை மன்னராக கருதிக் கொள்ளக் கூடாது “மசோதாக்கள் மீதான ஆளு நர்கள், குடியரசுத் தலைவரின் நடவடிக்கைகளை விசார ணைக்கு உட்படுத்துவது அரசி யலமைப்பு சாசனத்தின் அடிப்படை கோட்டபாட்டின் ஒரு பகுதியாகும். இதில் ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் விலக்கு இல்லை. ஜனநாய கத்தில் ஆளுநர் மன்னராகக் கருதி நடக்க முடியாது. இந்த விவகாரத்தில் மசோதாக்களுக்கு 3 மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கும், குடி யரசுத் தலைவருக்கும் காலக் கெடு விதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தேவையான ஒன்று” என வும் வாதிட்டார்.