கூட்டுறவுத் துறை தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும்!
கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில மாநாட்டில் தீர்மானம்
மதுரை, ஆக. 9 - தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன (சிஐடியு) முதல் மாநில மாநாடு, மதுரை மூட்டா அலு வலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது. மாநில முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் கு. உமாச்சந்தி ரன், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எல்.கே. மனோகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் எஸ். பிரேம் ஆனந்த், மதுரை மாவட்ட கூட்டுறவு ஊழி யர் சங்க பொருளாளர் டி. அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மதுரை மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க உதவி செயலாளர் ஆர். கணேசன் வரவேற்றுப் பேசி னார். மாநிலப் பொருளாளர் மா. சிட்டிபாபு அஞ்சலித் தீர்மானத்தை பொன்மொழிந்தார். மாநிலத் தலை வர் ஆ. கிருஷ்ணமூர்த்தி துவக்கவு ரையற்றினார். மாநில கன்வீனர் மு. துரைச் சாமி அறிக்கை வைத்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் இரா. தெய்வ ராஜ், மாவட்டச் செயலாளர் இரா. லெனின் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநிலப் பொதுச்செய லாளர் என்.ஆர்.ஆர். ஜீவானந்தம் நிறைவுரையாற்றினார். மதுரை மாவட்ட உதவி செயலாளர் கே. ராம மூர்த்தி நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
சம்மேளனத்தின் மாநிலத் தலை வராக கே. உமாச்சந்திரன், செயலா ளராக எம். துரைச்சாமி, பொருளாள ராக எல்.கே. மனோகரன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்
கூட்டுறவுத்துறை தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்; பணியாளர் கூட்டுறவு சங்கங்களை சீரழிக்கும் பொது பணிநிலைத் திறனை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு முழுவதிலும் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படாத செயலாளர்களுக்கு உடனடியாக ஆண்டு ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும்; பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு உடனடி யாக பணிஓய்வு ஆணையையும், ஓய்வுக்கால பணப்பலன்களையும் உடனே வழங்கிட வேண்டும்; 480 நாள் பணிமுடித்த அனைத்துப் பணி யாளர்களையும் நிபந்தனையின்றி பணி நிரந்தரம் செய்திட வேண்டும்; 4-வது ஊதிய திருத்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும்; கடன்பெற்ற உறுப்பினர் இறக்கும் தருவாயில் ஏற்படும் இடர்பாட்டை நீக்குவதற்காக உறுப்பினர் கடனுக்கு குழு காப்பீடு பிணையாளர் நிவாரண நிதி (Surety Relief Fund) இடர் நீக்கு நிதி (Risk alleviation fund) என்று மூன்று வகையான திட்டங்களை பரிசீலித்து ஒரே திட்ட மாக அறிவித்திட வேண்டும்; நீண்ட காலமாக சங்கத்தில் தவணை தவறி யுள்ள கடன்களை வசூலிக்க சிறப்பு கடன் வசூல் திட்டத்தை அறிவித்திட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
