tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்”:

பழனிசாமி : பழனிசாமி  கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த  விளக்கத்திற்கு பதிலளித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந் தால் கரூர் துயர சம்பவத்தைத் தடுத்திருக்கலாம் என்று குற்றம் சாட்டினார். நெரிசலைக் காரணம் காட்டி வேலுச்சாமிபுரத்தில் அதிமுகவுக்கு அனுமதி வழங்கவில்லை என்று சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி, ஆனால் தவெகவுக்கு அனுமதி வழங்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.  மேலும், ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப் பட்டது எப்படி என்றும், அவசரம் காட்டியது ஏன் என்றும் கேட்டார். எதிர்க்கட்சியினர் பேசிய பிறகு முதல்வர் பேசவேண்டும் என்ற நடைமுறையை முதலமைச்சர் மீறியதாகவும் கூறி னார். கரூர் விவகாரத்தில் முதல்வர் கூறியதற்கும் சட்டம் -  ஒழுங்கு ஏடிஜிபி கூறியதற்கும் முரண்பாடு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். கரூரில் விஜய் பரப்புரைக்கு எவ்வளவு கூட்டம் கூடும்  என்பது குறித்து காவல்துறை, உளவுத்துறை அரசுக்கு தகவல் கொடுக்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார். விஜய் கரூருக்கு முன்னதாகவே திருச்சி, அரியலூர், நாகப் பட்டினம், திருவாரூர் என்று நான்கு மாவட்டங்களில் பரப்புரை செய்திருந்தார் என்பதை சுட்டிக்காட்டி, கரூரில் மட்டும்  இது எப்படி நடந்தது என்று கேட்டார். கரூர் கூட்ட நெரிசலில்  சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் திமுக ஸ்டிக்கர் வந்தது  எப்படி என்றும், நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை வேக வேகமாக நடத்தி முடித்தது ஏன், என்ன அவசரம் என்றும் கேள்விகளை எழுப்பினார்.

விஜய்யின் செயலால்தான் நெரிசல் ஏற்பட்டது : எ.வ.வேலு விளக்கம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அமைச்சர் எ.வ. வேலு சட்டப்பேரவையில் முக்கியமான விளக்கம் அளித்தார்.  கரூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் நெரிசல் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், கரூர் சம்பவத்தைவிட அதிக கூட்டம் எதிர்க் கட்சித் தலைவருக்கு கூடியிருந்தாலும் அங்கு ஒன்றும் நடக்க வில்லை என்று தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதைக் கவனிக்க மக்கள் வருவதாகவும், அவரும் பேருந்தில் ஏறி பேசுவதாகவும் அமைச்சர் விளக்கினார். எதிர்க்கட்சித் தலைவர் பேருந்தின்  மீது ஏறி இரண்டு பக்கமும் கை காட்டுவதால் நெரிசல் ஏற்பட வில்லை என்று குறிப்பிட்ட அவர், விஜய் உள்ளேயே அமர்ந்து  செல்வதாகவும், பேசும் இடத்தில் மட்டுமே மேலே வருவதாக வும், அதனால்தான் நெரிசல் ஏற்பட்டது என்று தெளிவுபடுத்தி னார். கரூரில் காவல்துறை பொறுப்புடன் மிகச் சிறப்பாகவே செயல்பட்டதாகவும், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் எ.வ.  வேலு உறுதியளித்தார். கூட்ட நெரிசலுக்கு காவல்துறையின் அலட்சியம் காரணம் என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர்,  தவெக தலைவரின் வாகன நடமாட்ட முறையே நெரிச லுக்கு முக்கிய காரணம் என்று வலியுறுத்தினார்.

பாஜக வெளிநடப்பு

கரூர் விவகாரத்தை காரணங்காட்டி அதிமுக வைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்களும் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவையில் பேசியபோது, வேலுச் சாமிபுரத்தில் உள்ள ரவுண்டானாவில் தவெக  கூட்டத்திற்கு அனுமதி  வழங்கி இருந்தால் நெருக்கடி ஏற்பட்டிருக்காது  என்று தெரிவித்தார். கூட்டம் தொடங்கிய போது தவெக தலைவர் ‘பத்து ரூபா பாட்டில்’ என்ற பாடலைப் பாடி னார் என்று குறிப்பிட்ட அவர், பாடலை பாடிய போது மின்சாரம் துண்டிக்க ப்பட்டதாகவும், பின்னர் செருப்பு வீசப் பட்டதாகவும் தெரிவித் தார். செருப்பு வீசியது யார்  என்று கேள்வி எழுப்பி னார். எதிர்க்கட்சியினர் நடத்தக்கூடிய அரசியல் கூட்டங்களுக்கு அதிகப் படியான காவல்துறை யினர் வருவது கிடையாது என்று குற்றஞ்சாட்டிய நயினார் நாகேந்திரன், கரூர் விவகாரத்தில் காவல்துறையின் அலட் சியமே உயிரிழப்புக்கு காரணம் என்று வலி யுறுத்தினார். இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் அனை வரும் அரசுக்கு எதிராக  முழக்கமிட்டபடி வெளி நடப்பு செய்தனர்.

வெளிநடப்பில் பங்கேற்காத ஓபிஎஸ்

தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏ க்கள் வெளிநடப்பு செய்த  நிலையில், முன்னாள்  முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்யாமல் தொடர்ந்து அவை நடவ டிக்கையில் பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமி யுடன் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட் டையன், எடப்பாடி பழனி சாமி பேசுவதற்கு முன்ன தாகவே அவையை விட்டு வெளியேறிவிட்டார்.