பறக்கின் கால்வாய் தூர்வாரும் பணி துவக்கம்
நாகர்கோவில், அக். 9- நாகர்கோவில் மாநகராட்சி 26 -வது வார்டுக்குட்பட்ட கரியமாணிக்கபுரம், ஸ்ரீராம் மருத்துவமனை அருகே பறக்கின்கால் கால்வாயை ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்கும் பணியினை மேயர் ரெ.மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணாவுடன் துவக்கி வைத்தார். மாமன்ற உறுப்பினர் சொர்ணத்தாய், உதவி செயற்பொறியாளர் ரகுராமன், பகுதி செயலாளர் துரை, மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
