tamilnadu

img

சிஐடியு விரைவு போக்குவரத்து சங்க மாநில மாநாடு சேலத்திலிருந்து நினைவு ஜோதிப்பயணம் துவங்கியது!

சிஐடியு விரைவு போக்குவரத்து சங்க மாநில மாநாடு சேலத்திலிருந்து நினைவு ஜோதிப்பயணம் துவங்கியது!

சேலம், ஜுலை 15- திருச்சியில் நடைபெறவுள்ள சிஐடியு விரைவு போக்குவரத்து சங்க மாநாட்டில் ஏற்றுவதற்காக, சேலத்திலிருந்து நினைவு ஜோதிப் பயணம் செவ்வாயன்று துவங்கி யது. சிஐடியு அரசு விரைவு போக்கு வரத்து தொழிற்சங்க 34 ஆவது மாநில மாநாடு திருச்சியில் ஜூலை  16 ஆம் தேதி துவங்குகிறது. இம் மாநாட்டில் ஏற்றப்படுவதற்காக சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் பணிமனை முன்பிருந்து, சேலம் ஆர்.வெங்கட்டன் நினைவு ஜோதிப் பயணம் செவ்வாயன்று திருச்சி நோக்கி புறப்பட்டது. சேலம் கிளைச்  செயலாளர் லியாகத் அலி தலைமை யில் நடைபெற்ற நிகழ்வில், போக்குவரத்து ஓய்வுபெற்ற சங்க தலைவர்கள் சி.பி.வாசன், எம்.பரம சிவம், மணிமுடி ஆகியோர் ஜோதியை எடுத்துக் கொடுத்த னர். இதில், சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.செல்லப்பன் தலைமையில் ஜோதிப்பயணம் புறப்பட்டது. முன்னதாக, இந் நிகழ்ச்சியில், சிஐடியு சாலை போக் குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சுமைப்பணி தொழிலாளர் சம்மே ளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்க டபதி, அரசு விரைவு போக்குவரத்து  தொழிற்சங்க துணை பொதுச்செய லாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.