அரசுத் திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்!
உச்சநீதிமன்றம் அறிவிப்பு
புதுதில்லி, ஆக.6- ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த தடை யில்லை என்று உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி. யான சி.வி. சண்முகத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. முன்னதாக சி.வி. சண் முகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசுத் திட்டங்க ளுக்கான விளம்பரங்களில் முதல்வரின் புகைப்படத் தைப் பயன்படுத்தலாம் என வும், கட்சியின் கொள்கைத் தலைவர்கள், முன்னாள் முதல்வர்களின் புகைப்படங் களை அரசு விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது என வும் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை புதனன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், அர சுத் திட்டங்களில் முதல்வ ரின் பெயரைப் பயன்படுத்தத் தடை இல்லை என்று கூறிய துடன், சி.வி. சண்முகம் உள் நோக்கத்துடன் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும், நீதி மன்ற நேரத்தை வீணடித்து விட்டதாகவும் கண்டனம் தெரிவித்து, அவருக்கு ரூ. 10 லட்சம் அபராதமும் விதித் துள்ளது. மனுதாரர் ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து வழக்குத் தொடர்ந்ததை ஏற்க முடியாது என்றும், அர சியல் சண்டையை நீதிமன் றத்துக்குக் கொண்டு வரா தீர்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.