‘ஜனநாயகத்தின் உச்ச அமைப்பின் மீது நடந்த தாக்குதல் வெட்கக் கேடானது!’
சென்னை: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “உச்சநீதிமன்றத்திற்குள், மாண்புமிகு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நடத்தப்பட்ட வெட்கக்கேடான செயல் நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை அமைப் பின் மீதான தாக்குதலாகும், மேலும் இது கடுமையான கண்டனத்திற்கு உரியது. மாண்புமிகு தலைமை நீதிபதி கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதில ளித்த விதம் நீதித்துறையின் வலிமையைக் காட்டுகிறது, ஆனாலும் அந்த சம்பவத்தை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தாக்கியவர் தனது செயலுக்கான கார ணத்தை வெளிப்படுத்தியிருப்பது, நமது சமூகத்தில் அடக்கு முறை மற்றும் படிநிலை மனநிலை இன்னும் எவ்வளவு ஆழ மாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது. நமது நிறுவனங் களை மதிக்கும் மற்றும் பாதுகாக்கும் மற்றும் நமது நடத்தை யில் முதிர்ச்சியைக் காட்டும் ஒரு கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்” - என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
நீதிபதிக்கு எதிராக அவதூறு: மூவர் கைது
சென்னை: கரூர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜயையும் தமிழக வெற்றிக் கழகத்தையும் கடுமையாக கண்டித்திருந்தார். இதையடுத்து நீதிபதியின் குடும்பப் பின்னணியைக் குறிப்பிட்டு, அவருக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துகளை சமூக ஊடகங்களில் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், நீதி பதிக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் கண்ணன், டேவிட், சசி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நட வடிக்கை எடுத்துள்ளனர்.
20 சதவீத தீபாவளி போனஸ்
சென்னை: தமிழக அரசின் பொதுத் துறை நிறுவன ஊழியர் களுக்கு 20 சதவீத தீபா வளி போனஸ் அறி விக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் அதிகபட்சம் ரூ.16,400 வரை தீபா வளி போனஸ் வழங்கப் படும். மின் பகிர்மான கழகம், அரசு போக்கு வரத்துக் கழகம், நுகர்வோர் வாணிப பொருள் கழகம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் குரூப் டி, சி பிரிவு ஊழி யர்களுக்கு இந்த தொகை அளிக்கப் படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற் கான அறிவிப்பை வெளி யிட்டுள்ளார்.