தமிழ்நாடு சுமைப் பணி தொழிலாளர் சம்மேளன 10 ஆவது மாநில மாநாடு திருச்சியில் தொடங்கியது
திருச்சிராப்பள்ளி, செப்.21- தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் 10 ஆவது மாநில மாநாடு திருச்சியில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாளான ஞாயிறன்று சேல த்தில் இருந்து சுமைப்பணி சங்க சேலம் மாவட்டத் தலை வர் பி.ஆறுமுகம் தலைமை யில் கொண்டு வரப்பட்ட மாநாட்டு கொடியை, சிஐடியு சேலம் மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன் எடுத்துக் கொடுக்க, அதனை சம்மேளன சிறப்பு தலைவர் எஸ்.குணசேகரன் பெற்றுக் கொண்டார். பொன்மலையில் இருந்து சுமைப்பணி சங்க திருச்சி மாவட்டப் பொரு ளாளர் ஸ்டாலின் தலைமை யில் கொண்டு வரப்பட்ட பொன்மலை தியாகிகள் ஜோதியை, சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் மாறன் எடுத்துக் கொடுக்க, அதனை சம்மேளன துணைத் தலைவர் எம்.ராஜ கோபால் பெற்றுக் கொண்டார். மாநாட்டுக் கொடியை சம்மேளன துணைத் தலை வர் எம்.அர்த்தநாரி ஏற்றி னார். பின்னர் திருச்சி பிராட்டி யூர் தமிழ்நாடு பொது நிலை யினர் பணிக்குழு அரங்கில் தோழர் ஜே. லாசர் நினை வரங்கத்தில் நடந்த பொது மாநாட்டிற்கு சம்மேளனத் தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை வகித்தார். சம்மேளன துணைச் செயலாளர் ஆர்.சிவக்குமார் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை சம்மேளன துணைத் தலைவர் அ.பிச்சை முத்து வாசித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை துவக்க உரையாற்றினார். நடை பெற்ற பணிகள் - அமைப்பு அறிக்கையை சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.அருள்குமார் வாசித்தார். நிதிநிலை அறிக்கையை சம்மேளன பொருளாளர் பி.குமார் சமர்ப்பித்தார். மாநாட்டின் இரண்டாம் நாளான திங்களன்று புத்தக வெளியீட்டு விழா நடை பெறுகிறது. சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.ரெங்கராஜன் வாழ்த்துரை வழங்குகிறார். மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் நிறைவுரையாற்றுகிறார். சுமைப்பணி சங்க திருச்சி மாவட்டத் தலைவர் ரமேஷ் நன்றி கூறுகிறார். பின்னர் திருச்சி காந்தி மார்க்கெட், காந்தி சிலையிலிருந்து சுமைப் பணி தொழிலாளர்களின் கோரிக்கை விளக்க பேரணி நடைபெறுகிறது. இதையடுத்து மாலை 6 மணிக்கு குட்செட் ரோடு முதலியார் சத்திரத்தில் தோழர் எம்.ஏ.பாபு நினைவு திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சிஐடியு லாரி புக்கிங் ஆபீஸ், ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் திருச்சி மாவட்டச் செயலாளர் ராமர் நன்றி கூறுகிறார்.
