கட்டப்பஞ்சாயத்து செய்யும் மாவட்ட தொடக்க கல்வி துறை
காத்திருப்பு போராட்டத்தை தொடங்கும் ஆசிரியர்கள்
தேனி, ஆக.16- போடி ஒன்றியத்தில் மலைக் கிராமங்களில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில் சுழற்சி விதிகளின்படி நிரப்பப்படாமல் வெவ்வேறு இடைநிலை ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை மாலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தேனி மாவட்டச் செயலாளர் ராம்குமார் தெரிவித்ததாவது: போடி ஒன்றியத்தில் முத்துவார்குடி, கொட்டக்குடி, அகமலை ஆகிய மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை சுழற்சி முறையில் நிரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் மலைச் சுழற்சி முன்னுரிமைப் பட்டியலின் படி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி அமர்த்தா மல், தினமும் வெவ்வேறு இடைநிலை ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி மாற்று பணியாக தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் அனுப்பி ஆசிரியர்களை மன உளைச்ச லுக்கு ஆளாக்கி வருகிறார்கள். மலைச் சுழற்சி முறையில் முன்னுரிமை பட்டியல்படி தலைமை ஆசிரியர்களை மலை கிராமங்களுக்கு பணி நிரப்பும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் சங்கத் தின் சார்பில் ஈடுபட உள்ளனர். திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.