tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

தேர்வு பணிகளை புறக்கணிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு

சிதம்பரம், செப்.30- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் முத்து வேலாயுதம், செல்வராஜ், ரொனால்ட் ரோஸ், பரணி உள்ளிட்ட கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகை, முனைவர் பட்ட ஊக்கத்தொகை மற்றும் காலமுறை பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும், 3 ஆண்டுகள் பதவி காலம் முடிந்த அனைத்து காலமுறை பதவிகளுக்கும் தகுதியானவர்களை கொண்டு நிரப்பிட வேண்டும் என்றும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மேலும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து பல்கலைக்கழக தேர்வு பணிகளை புறக்கணிப்பது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

சாகுபடி நிலத்திற்கு பட்டா கேட்டு கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர், செப்.30- சாகுபடி நிலத்திற்கு பட்டா கேட்டும், மனை பட்டா கேட்டும் விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று (செப்.30) நடைபெற்றது. அரசின் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்க ளுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும்,  தமிழ்நாட்டில் அனைவருக்கும் சொந்த வீடு திட்டத்தை அறிவித்து மாநில அரசு செயல்படுத்த வேண்டும், மாநிலம் முழுவதும் வழங்கப்பட்ட சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளவற்றை மீட்டு பட்டியல் சமூக மக்களிடம் ஒப்படைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கொடுக்கன் பாளையம், மலையடி குப்பம், பெத்தாங்குப்பம், கீரப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் 155 குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக சாகுபடி செய்த நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பிரகாஷ், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சரவணன் ஆகி யோர் தலைமை தாங்கினர். விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், ஆர்.ராமச்சந்திரன், ஆர்.தட்சணாமூர்த்தி, பி.கற்பனைச் செல்வம், ஆர்.லோகநாதன், ஜே.ராஜேஷ் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலை வர்கள் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, டி.கிருஷ்ணன், பி.வாஞ்சிநாதன், ஏ.பன்னீர், ஜி.வெற்றி வீரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

கள்ளக்குறிச்சி, செப்.30-  கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி யில் கடலூர் மாவட்டம், பெரிய நெசலூரை சேர்ந்த ராம லிங்கம் மகள் ஸ்ரீமதி (17) என்பவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவ ரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக விழுப்புரம் சிபி சிஐடி போலீசார், பள்ளி தாளா ளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிபிரியா, கீர்த்திகா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்  பத்திரிகையை விழுப்புரம் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் இவ்வழக்கில் இருந்து ஆசிரியர்கள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய இருவரும் நீக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு நேற்று கள்ளக்குறிச்சி தலைமை குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சாட்சிகள் யாரும் வராத நிலையில் இவ்வழக்கின் விசாரணையை அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதி பதி ஜெயவேல் உத்தரவிட்டார்.