தமுஎகச பொன்விழா ஆண்டு நிறைவு மன்னார்குடியில் கலை இலக்கிய இரவு
மன்னார்குடி, ஆக. 11- தமுஎகச திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி கிளையின் சார்பாக, பொன்விழா ஆண்டு நிறைவு கலை இலக்கிய இரவு வெள்ளிக்கிழமை, பந்தலடி கீழ்புறம் கவிஞர் நந்தலாலா, கரிசல்குயில் கிருஷ்ணசாமி நினைவரங்கத்தில் நடைபெற்றது. துவக்க நிகழ்ச்சிக்கு, கிளைத் தலைவர் கே.வி. பாஸ்கரன் தலைமை ஏற்றார். கா. பிச்சைக்கண்ணு வரவேற்றார். மாநில துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் களப்பிரன் துவக்க உரையாற்றினார். மாவட்டத் தலைவர் மு. சௌந்தரராஜன், மாவட்டச் செயலாளர் முனைவர் ஜீ. வெங்க டேசன், மாவட்டப் பொருளாளர் எம். செல்வ ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மன்னார்குடி நகர வட்டாரப் பள்ளிகளில் தமிழ்பாடத்தில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி, பாராட்டப்பட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் சுந்தர வள்ளி, மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், சரவணன் உரையாற்றினர். ஸ்ரீ வில்லிபுத்தூர் கோடாங்கி தப்பாட்டக் குழு வினரின் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. லிம்போ கேசவனின் மனித குரங்கு நடனம் நடைபெற்றது. கவிஞர் சரஸ்வதி தாயுமானவன் எழுதிய ஜோடிமான்கள் சிறு கதை தொகுப்பை, தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளரும், அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியரு மான முனைவர் இ. மணிமேகன் வெளியிட, உ.சு. பொன்முடி பெற்றுக்கொண்டார். கவிஞர் வல்லம் தாஜ்பால் தலைமையில், கவியரங்கம் நடைபெற்றது. பாடகர்கள் கரிசல் கருணாநிதி, சித்தேரி சந்திரசேகரன், ப்ரீத்தி, ஆலங்குடி மோகனா, மேட்டூர் வசந்தி நாட்டுப்புற நல்லிசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். மாநில பொதுச்செயலாளர் எழுத்தா ளர் ஆதவன் தீட்சண்யா, சிறப்பு உரையாற்றி னார். கி. அகோரம் நன்றி கூறினார். முன்ன தாக, மாலை 5.30 மணிக்கு மாவட்டத் தலை வர் எம். சௌந்தரராஜன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இலக்கிய இரவு மேடையை நோக்கி, மதநல்லிணக்க பேரணியை, முனைவர் ந. லெனின் தலை மையேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சி களை உ.சு பொன்முடி தங்க. ஜெகதீசன் தொகுத்து வழங்கினர்.