tamilnadu

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சி புறநகர் மாவட்ட 5 ஆவது மாநாடு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  திருச்சி புறநகர் மாவட்ட 5 ஆவது மாநாடு

திருச்சிராப்பள்ளி, ஆக. 11-  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சி புறநகர் மாவட்ட 5 ஆவது மாநாடு துறையூரில் நடந்தது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் இரா. முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை மூத்த தோழர் காசிராஜன் ஏற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் வீரவிஜயன் வரவேற்புரையாற்றினார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன் துவக்கவுரை ஆற்றினார். துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பேரவை துணைத் தலைவர் பாண்டித்துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆசிரியர் மணிவண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சனாதனத்தை வீழ்த்துவோம் என்ற தலைப்பில் கவிஞர் இரா. எட்வின் சிறப்புரையாற்றினார். தலைவராக சிவானந்தம், செயலாளராக இரா. முத்துக்குமார், துணைத் தலைவர்களாக கோமதி, சுப்பிரமணியன், துணைச் செயலாளர்களாக வீரவிஜயன், இளங்கோவன் மற்றும் 17 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.  புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநில துணைத் தலைவர் சின்னை. பாண்டியன் நிறைவுரையாற்றினார். துறையூர் ஒன்றியச் செயலாளர் சங்கிலி துரை நன்றி கூறினார்.