தமிழக வாழ்வுரிமைக் கட்சி பிரமுகர் வெட்டிப் படுகொலை
மயிலாடுதுறை, ஜூலை 5 - மயிலாடுதுறை மாவட்டம், செம்ப னார்கோவிலில் தமிழக வாழ்வுரி மைக் கட்சி பிரமுகரை வெள்ளியன்று மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் மகன் மணிமாறன் (32). இவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பிரமுகராக உள்ளார். இந்நிலையில் வெள்ளியன்று காலை மயிலாடு துறையில் உள்ள ஒரு தனியார் மண்ட பத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் உட்கட்சித் தேர்த லுக்கு வேட்பு மனு வாங்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள மணிமாறன் ஒரு காரில் வந்ததாக தெரிகிறது. அந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு மீண்டும் மயிலாடுதுறையிலிருந்து காரைக் கால் நோக்கிச் சென்று கொண்டிருந் தார். காரை ஒருவர் ஒட்டிச் செல்ல முன்புறம் மணிமாறன் அமர்ந்திருந் தார். அப்போது மதியம் 3.20 மணி யளவில் மயிலாடுதுறை-தரங்கம் பாடி சாலையில் செம்பனார்கோயில் தனியார் பள்ளி அருகே சென்ற போது, 2 கார்களில் பின் தொடர்ந்து வந்த ஏழு பேர் கொண்ட மர்ம நபர்கள் மணிமாறன் சென்ற காரை வழிமறித்தனர். பின்னர் அந்த மர்ம நபர்கள், காரின் முன்புற கண் ணாடியை அடித்து நொறுக்கி கார் கதவைத் திறந்து மணி மாறனை இழுத்து வெளியே தள்ளி னர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் சாலையோரம் விழுந்து கிடந்த மணிமாறனை, சரமாரியாக அரிவாளால் தலையை வெட்டி சிதைத்தனர். இதில் சம்பவ இடத்தி லேயே மணிமாறன் உயிரிழந்தார். காரில் வந்த மர்ம கும்பல் மணி மாறனை படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. தகவலறிந்த செம்பனார்கோ யில் காவல் ஆய்வாளர் கருணா கரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணி மாறனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடு துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண் டார். அப்போது அங்குள்ள கண்கா ணிப்பு கேமராக்களின் பதிவை சே கரித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டார். படுகொலை செய்யப்பட்ட மணி மாறன், கடந்த 2021 ஆம் ஆண்டு காரைக்கால் மாவட்ட முன்னாள் பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் முதன்மை குற்ற வாளி என்பது குறிப்பிடத்தக்கது.