tamilnadu

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்  அனைத்து அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக. 10-  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட மையத்தின் சார்பில்,  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பால் பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் நவநீதன் பேசினார்.  அனைத்து மருந்தாளு நர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சகாதேவன், வருவாய் துறை சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொன் மாடசாமி, மாவட்ட துணைத் தலைவர் பிரேம் குமார், மாவட்ட துணைத் தலைவர் சங்கரநாராயணன், நெடுஞ்சாலை சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகி தேவநாதன், ஸ்ரீரங்கம் வட்டக்கிளை தலைவர் சசிகலா, மண்ணச்சநல்லூர் வட்டக்கிளை செயலாளர் கிளாரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மகளிர் துணைக் குழு நிர்வாகி கலையரசி நன்றி கூறினார்.  திருச்சி இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் மாநில துணைத் தலைவர் செல்வராணி துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் நவநீதன், மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். வட்டக்கிளை தலைவர் சுரேஷ்பிரபு நன்றி கூறினார்.  திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாவட்ட இணைச் செயலாளர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. வணிக வரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பால் பாண்டி தலைமையில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி 2 வட்ட க்கிளை, பல்துறை வளாக கட்டட அலுவலகத்தில் மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் அமுதவல்லி தலைமையில் நடைபெற்றது. மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டக்கிளை துணைத் தலைவர் முத்துக்கருப்பன் தலைமையில் நடைபெற்றது. சாந்தி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மேனாள் மாநில துணைத் தலைவர் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு சுகாதா ரத்துறை போக்குவரத்து பணிமனை முன்பு ஏர்போர்ட் மூத்த தோழர் தியாகராஜன் தலைமையில், சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவெறும்பூர் வட்டக்கிளையில், வட்டக்கிளை தலைவர் சந்திரா தலைமையில், ஸ்ரீரங்கம் வட்டக்கிளை அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குழு மணி ஆரம்ப சுகாதார நிலையம் வட்டக்கிளை தலைவர் சசிகலா தலைமையில், மருங்காபுரி வட்டக்கிளையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வட்டக்கிளைச் செயலாளர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணப்பாறை வட்டக்கிளையில், அரசு மருத்துவமனையில் வட்டக்கிளை செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மாவட்ட துணைத் தலைவர் அல்போன்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லால்குடி வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன் பாபு, வட்டக்கிளை தலைவர் பெர்னத்மேரி தலைமையில் நடைபெற்றது  முசிறி வட்டக்கிளையில் தா. பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வட்டக்கிளை தலைவர் அமுதா தலைமையில், முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டக்கிளை நிர்வாகி சித்ரா தலைமையில், தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டக்கிளைச் செயலாளர் ஜெயக்கொடி, சாந்தி முன்னிலையில், துறையூர் வட்டக்கிளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிளைச் செயலாளர் மணிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பெரம்பலூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், கொத்தடிமை கூலி முறை பெறும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை பெரம்பலூர் கூட்டுறவுத் துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ரா. சோ. ரமேஷ் தலைமை வகித்தார். ந. வினோத்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். பெரம்பலூர் வட்டச் செயலாளர் ராஜதுரை நன்றி தெரிவித்தார். கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், கடவூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம்,  க.பரமத்தி, மண்மங்கலம், கரூர், தோகைமலை ஆகிய வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அனைத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அனைத்து வட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர்கள் தலைமை வகித்தனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ். அன்பழகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.செல்வராணி, மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  தஞ்சாவூர் தஞ்சாவூர் இந்து சமய அறநிலைய துறை  அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு வட்டச் செயலாளர் ச.அஜெய்ராஜ் தலைமை வகித்து கோரிக்கை விளக்க உரையாற்றினார். இந்து சமய அறநிலையத்துறை சங்கத்தின் மாநிலச்  செயலாளர் பாபு துவக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் பார்த்தசாரதி நிறைவுரையாற்றினார். வடக்கு வட்ட இணைச் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.