காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவித்து அவமதிப்பு பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுத்திடு
சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டக் குழு வலியுறுத்தல்
மதுரை, அக்.3- காந்தி சிலை க்கு காவித் துண்டு அணி வித்து அவம தித்த பாஜக வினர் மீது கடும் நடவடிக்கை எடு க்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக் குழு வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன் விடுத்துள்ள அறிக்கை: இந்திய விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடி, மத நல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற் றுமையை நிலைநாட்ட தன்னு டைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களை உலகமே போற்றுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசி யல் கட்சிகள், ஜனநாயக அமைப்பு கள், முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இத்தகைய நிகழ்வின் போது, பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாவட்டத் தலை வர் மாரி சக்கரவர்த்தி, மாவட்ட நிர்வாகி சிவ பிரபாகரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாஜகவினர், யாரும் எதிர்பாராத வகையில் காந்தி சிலைக்கு காவி துண்டை அணிவித்து கூச்சலிட்டது, அங்கி ருந்த மக்களிடம் பெரும் அதிர்ச்சி யையும், அதிருப்தியையும் ஏற் படுத்தியுள்ளது. இதுவரை மக்களிடையே அமைதி, ஒற்றுமை, மத நல்லி ணக்கம் உருவாக்கி வந்த காந்தி அருங்காட்சியகம் மகாத்மா காந்தி யை படுகொலை செய்த கோட்சே யை கொண்டாடும் கூட்டத்தால் இன்று வன்முறைக்கு வித்திடும் இடமாக மாறியுள்ளது. மகாத்மா வின் ரத்த கறை படிந்த ஆடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு அதை காண்பதற்காக மக்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பலின் இந்த செயல் மதுரையில் மத நல்லிணக்கம், மக்களின் ஒற்றுமை யை பாதிக்கும் சூழலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள் ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக் கிறது. மகாத்மா காந்தி சிலையை அவமதித்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த பாஜகவினரின் மீது வழக்குப் பதிவு செய்து உடனடி யாக கைது நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும். சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினர் எந்தவித தலையீடும் செய்யவில்லை. பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் அருங் காட்சியக பொறுப்பாளர்கள், நிர் வாகிகள் இத்தகைய சம்ப வத்திற்கு பொறுப்பேற்க வேண் டும். இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையை அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் காந்தி அருங்காட்சியகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு மாவட்ட நிர்வாகம் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்க வேண் டும் என கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
