tamilnadu

img

சிபிஐ பொதுச் செயலாளராக மீண்டும் து.ராஜா தேர்வு

சிபிஐ பொதுச் செயலாளராக மீண்டும் து.ராஜா தேர்வு

சண்டிகர், செப். 26 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் து.ராஜா  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது அகில இந்திய மாநாடு சண்டி கரில் செப்டம்பர் 25 அன்று நிறைவு  பெற்றது.  இம்மாநாட்டில் து.ராஜா உள்பட 12 பேர் கொண்ட புதிய தேசிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. பொதுச் செயலாளராக து.ராஜா,  தேசிய செயற்குழு உறுப்பினர் களாக அமர்ஜித் கவுர், டாக்டர் பி.கே.கங்கோ, ராம கிருஷ்ண பண்டா, ஆனி ராஜா, டாக்டர் ஹிரிஷ் சர்மா, கே.பிரகாஷ் பாபு, பி.சந்தோஷ்குமார் எம்.பி., சஞ்சய் குமார், பல்லா வெங்கட் ரெட்டி, கே.ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழ்நாட்டிலிருந்து தேசிய குழு உறுப்பினர்களாக மு.வீரபாண்டியன், டி.எம்.மூர்த்தி, நா.பெரியசாமி, க.சந்தானம், வை.செல்வராஜ் எம்.பி.,  வகிதா நிஜாம், டி.ராமச்சந்திரன் எம்எல்ஏ, எம்.ஆறுமுகம், மு.கண்ணகி,  ஜி.ஆர்.ரவீந்திரநாத், எம்.செல்வ ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அக்கட்சியின் மத்திய கட்டுப் பாட்டுக்குழு தலைவராக டாக்டர் கே.நாராயணா தேர்வு செய்யப்பட்டார். கட்டுப்பாட்டுக்குழுவில் தமிழகத் தலைவர் ஆர்.முத்தரசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.