tamilnadu

img

மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கல்

விதொச தொடர் கோரிக்கைக்கு வெற்றி

ஈரோடு, ஆக.12- ஈரோடு மாவட்ட அரசு தலைமை  பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவ மனையில் ரூ.40.00 லட்சம் மதிப்பீட் டில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை அமைச்சர் சு. முத்துசாமி பொதுமக்கள் பயன்பாட் டிற்கு வழங்கினார். இம்மருத்துவ மனையின் தரம் உயர்த்த வேண்டும்  என தொடர்ந்து விவசாயத் தொழிலா ளர் சங்கம் வலியுறுத்தி வருவது குறிப் பிடத்தக்கது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிய பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையாக 8 தளங்களுடன் இயங்கி வருகிறது.  தினந்தோறும் 5 ஆயிரத்திற்கு  மேற்பட்ட வெளி நோயாளிகளுக் கும், உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்நோக்கு மருத்துவமனையில் பலதுறைகள் இருந்தாலும் முழுத்திறனுடனும் செயல்படுவதில்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது. அதற்காக  பெருந்துறை செல்ல வேண்டியுள் ளது. துறைசார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பிரிவி னர், ஊழியர்கள் மிகக் குறைந்த அள விலேயே உள்ளனர். இதனால் நோயாளிகள் சேலம் மற்றும் பெருந் துறை மருத்துவக்கல்லூரி மருத்து வமனைகளுக்கு அனுப்பப்படும் நிலை தொடர்கிறது. நுரையீரல், புற்றுநோய் உள்ளிட்ட உயிர் காக்கும்  மருந்துகள் இல்லை. இதனை பெற  பெருந்துறை செல்ல வேண்டியுள் ளது.  நோயாளிகளுக்கு பாதுகாப்பற்ற  இத்தகைய அவல நிலை மாற்றப்பட வேண்டும். உயிர் காக்கும் சிகிச்சை கள் வழங்க மருத்துவர்கள் உள்ளிட்ட  ஊழியர்கள், தேவையான மருத்துவ  உபகரணங்கள் வழங்க வேண்டும். முழுத்திறனுடன் மருத்துவமனை செயல்பட போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  ஆர்.விஜயராகவன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட அரசு தலைமை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.40.00 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு கூடம், துணி உலர்த்தும் களம், பொது கழிவுகள் சேகரிக்கும் களங் கள், எண்டோஸ்கோப்பி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர், ஜெனரல் வேஸ்ட்  பின், ஃபயோ கேமிஸ்ட்ரி அனலை சர், அறை குளிர்விப்பான் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும்  உட்கட்டமைப்புகள் பொதுமக்கள்  பயன்பாட்டிற்கு வீட்டுவசதி, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி னார்.