பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்வதற்கு அடங்கல் சான்றிதழை உடனே வழங்கிடுக!
இராமநாதபுரம் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் கோரிக்கை
இராமநாதபுரம்,அக்.17- பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்வ தற்கு பயிர் அடங்கல் சான்றிதழை உடனே வழங்க வேண்டும் என்று இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அக்டோபர் 17 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை யில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவ சாயிகள் அளித்த கோரிக்கை மனுக்க ளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் வேளாண்மைத் துறையின் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளன. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். முத்துராமு பேசுகையில், விவசாயிக ளுக்கு பயிர் இன்சூரன்ஸ் பதிவு காலம் என்பதால் கிராம நிர்வாக அலு வலர் மூலம் வழங்கும் பயிர் அடங்கல் சான்றை உடனே வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை தாமதப்படுத்தாமல் உடனே வழங்க வேண்டும். நீர்நிலைகள் தூர்வார வேண்டும், பாசன கண்மாய்க ளில் கரைகளை பலப்படுத்தி கருவேல மரங்கள் அகற்ற வேண்டும், 2024-2025 ஆம் ஆண்டு மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். தொடர்ந்து இராமநாதபுரம், கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், பர மக்குடி ஆர்.எஸ்.மங்கலம் திரு வாடானை, போகலூர், நயினார் கோவில், மண்டபம் மற்றும் திருப் புல்லாணி வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை வட்டார வாரி யாக எடுத்துரைத்தனர். இந்த கோ ரிக்கைகளுக்கு தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து விவசாயி கள் முன்வைத்த கோரிக்கைகளான நீர்நிலைகள் தூர்வார வேண்டுதல், பாசன கண்மாய்களில் கரைகள் பலப் படுத்தி கருவேல மரங்கள் அகற்றி விவசாயிகளுக்கு போக்குவரத்து வச திக்கேற்ப நடவடிக்கை வேண்டுதல். சாலைகள் சீரமைத்தல், பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றி தருதல், விளை நிலங்களில் தாழ்வாக மின்வயர்கள் செல்வதை சீர்செய்தல் போன்ற கோ ரிக்கைகளுக்கு தொடர்புடைய துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மேலும் விவசாயிகளுக்கு தனியார் உரக்கடைகளில் உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள், விதைகள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்வதை உரிய விலை க்கு விற்பனை செய்கிறார்களா என்றும் அதற்குரிய கட்டண ரசீதும் வழங்கு வதை வேளாண்மைத்துறை அலுவ லர்கள் ஆய்வு செய்திட வேண்டும். தவறுகள் கண்டறிந்தால் தனியார் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். பின்னர் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாதந்தோறும் நடை பெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய தீர்வுகள் காணப் பட்டு வருகின்றது. மேலும் விவசா யிகள் வழங்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்திடவும், அவர்களுக்கு உரிய பலன்கள் உரிய நேரத்தில் கிடைத்திடவும் அலுவலர்கள் பணி யாற்றிட வேண்டும் எனவும் தெரி வித்தார். மேலும் விவசாயிகள் வேளாண் சார்ந்த சந்தேகங்களை அருகில் உள்ள வேளாண் அலுவல கங்களுக்கு நேரில் சென்று கேட்டறிந்து பயன் பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, வேளாண்மைத்துறை இணை இயக்கு நர் (பொ) திரு.பாஸ்கரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
