பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க கடும் நடவடிக்கை தேவை
மாதர் சங்க அறந்தாங்கி ஒன்றிய மாநாடு கோரிக்கை
அறந்தாங்கி, ஜூலை 13- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய மாநாடு கற்பகம் திருமண அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ராதா தலைமை வகித்தார். ஆர். லதா மாநாட்டு கொடி ஏற்றினார். செல்வி வரவேற்று பேசினார். கார்த்திகா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாதர் சங்க மாவட்ட தலைவர் பாண்டிச்செல்வி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டில் ஒன்றிய தலைவராக கார்த்திகா, செயலாளராக ராதா, பொருளாளராக ராசாத்தி மற்றும் 17 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனையை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் கவி பாலா, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே. தங்கராஜ், சிபிஎம் அறந்தாங்கி தாலுகா செயலாளர் நாராயணமூர்த்தி, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ராசு ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி. சுசீலா உரையாற்றினார். தென்றல் கே. செல்வி நன்றி கூறினார்.