tamilnadu

மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில மாநாட்டு வரவேற்பு குழு அமைப்பு

மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான  சங்கத்தின் மாநில மாநாட்டு வரவேற்பு குழு அமைப்பு

திருச்சிராப்பள்ளி, அக். 6-  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 5 ஆவது மாநில மாநாடு, டிசம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநகர், புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில், மாநில மாநாட்டு வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம், ஞாயிறன்று நடந்தது. கூட்டத்திற்கு, புறநகர் மாவட்டச் செயலாளர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட துணைத் தலைவர் அந்தோணி சேகர் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் பா. ஜான்சிராணி, மாநிலத் தலைவர் வில்சன், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொது மேலாளர் ஜெயபால், பெல் சிஐடியு சங்க தலைவர் எஸ். ஸ்ரீதர், மாவட்ட துணைத் தலைவர், கோவி.வெற்றிச்செல்வம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் ஜெயசீலன், சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராக திருச்சியில் புகழ் பெற்ற மனநல மருத்துவர் அண்ணாதுரை, செயலாளராக பெல் சிஐடியு சங்கத் தலைவர் எஸ். ஸ்ரீதர், பொருளாளராக ஜோன்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டன. மேலும் 12 குழுக்கள் அமைக்கப்பட்டது. கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் இளங்கோவன், கணேசன், புருஷோத்தமன், ராதாகிருஷ்ணன். தமிழ்ச்செல்வி, ரமேஷ்பாபு, சத்யா. நாகராஜ், செல்வம், பாரதி, கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு கிளை சங்கங்கள் சார்பில், மாநாட்டிற்கு முதற்கட்ட நிதி வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.