பேராவூரணி அருகே “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
தஞ்சாவூர், ஜூலை 16- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் தனியார் திருமண மண்டபத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்துப் பேசினார். இதில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்திரா, பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 15 அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, தனித்தனி கவுண்டர்கள் அமைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இதில் 46 விதமான சேவைகள் வழங்கப்பட்டன. சுற்று வட்டாரப் பகுதிகளைச் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினர்.