tamilnadu

img

சேதுபாவாசத்திரம் அருகே “உங்களுடன் ஸ்டாலின்’’ முகாம்

சேதுபாவாசத்திரம் அருகே “உங்களுடன் ஸ்டாலின்’’ முகாம்

தஞ்சாவூர், ஆக. 31-   தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், இரண்டாம்புளிக்காட்டில், இரண்டாம் புளிக்காடு, அடைக்கத்தேவன், சேதுபாவாசத்திரம், மரக்காவலசை, ராவுத்தான்வயல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், “உங்களுடன் ஸ்டாலின்’’ சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.  பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர் முகாமை தொடங்கி வைத்தார். தாட்கோ மாவட்ட மேலாளர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் முகாமைப் பார்வையிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.  நிகழ்ச்சியில், பேராவூரணி வட்டாட்சியர் நா.சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் உரிமைத்தொகை கேட்டு 248 மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 648 மனுக்களை பொதுமக்கள், அரசு அலுவலர்களிடம் வழங்கினர்.