tamilnadu

img

ஏலாக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஏலாக்குறிச்சியில் நலம் காக்கும்  ஸ்டாலின் மருத்துவ முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரியலூர், செப். 15-  அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இம்முகாமை, பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மு. விஜயலட்சுமி, பொதுமக்களிடம் மருத்துவ சேவைகள் வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000 திருமண உதவித் தொகைக்கான ஆணை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 9 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், ஒரு நபருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றினை வழங்கினார்.  முகாமுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி முன்னிலை வகித்தார். இம்முகாமில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.