tamilnadu

img

நுகர்வு கலாச்சாரமும், வரதட்சணை மரணங்களும் திருப்பூரில் சிறப்புக் கருத்தரங்கம்

நுகர்வு கலாச்சாரமும், வரதட்சணை மரணங்களும் திருப்பூரில் சிறப்புக் கருத்தரங்கம்

திருப்பூர், செப்.11- வரதட்சணை மரணங்களைத் தடுப்பதற்கு, பெண்கள் சாதி, சடங்கு,  சம்பிரதாயத்தைத் தூக்கிச் சுமக்கும்  நிலையில் இருந்து, திருமணம் என் பது வாழ்க்கைத் துணையைத் தேர்ந் தெடுப்பது என்ற புரிதல் நிலைக்கு வர  வேண்டும் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் நடத்திய கருத்த ரங்கில் தெரிவிக்கப்பட்டது. நுகர்வு கலாச்சாரமும், வரதட் சணை மரணங்களும் என்ற தலை மையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் புதனன்று திருப்பூர் பி. ஆர்.நிலையத்தில் சிறப்புக் கருத்த ரங்கம் நடத்தியது. அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் மாநில மாநாடு கன்னியா குமரியில் செப்.24 முதல் 27 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி இக்கருத்தரங்கம் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ராதேவி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பா. லட்சுமி வரவேற்றார். மாவட்டச் செய லாளர் எஸ்.பானுமதி சிறப்புரை யாற்றினார். இதில், நுகர்வு கலாச்சா ரமும் வரதட்சணை மரணங்களும் என்ற தலைப்பில் எழுத்தாளர் தீபலட் சுமி பங்கேற்று கருத்துரையாற்றி னார்.  இக்கருத்தரங்கில் பேசியவர்கள்  கூறியதாவது: ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு பரிசம் போட்டு, திரும ணம் செய்து கொள்ளும் நிலை என் பது இருந்தது. இந்து பிராமணர்க ளின் சடங்கு, சம்பிரதாயம் என்பதில் இருந்துதான், பெண்களைத் திரும ணம் செய்வதற்கு வரதட்சணை வாங்குவது என்ற நிலை ஏற்பட் டது. மூடநம்பிக்கை, சடங்கு, சம்பிர தாயங்கள் அதிகளவில் வலுப்பட்டது தான் வரதட்சணை என்பது அதிக ரித்து அது மிகக் கொடுமையான நடைமுறையாக மாறியிருக்கிறது. தற்காலத்தில் நுகர்வுக் கலாச்சா ரம் அதிகரித்திருக்கும் நிலையில்,  இளம்பெண்கள் கூட, ஆடம்பரத்தை  விரும்புகின்றனர். தங்கள் வீடுகளில்  அதிக நகை, கார் உள்ளிட்ட பொருட்க ளுடன் வரதட்சணை கொடுப்பதை விரும்புகின்றனர். பெண்கள் தங்க ளுக்கான சொத்துரிமை என்பதைத் தாண்டி வரதட்சணை என்பது அதிக ரித்துள்ளது. மேற்கு மாவட்டங்களில் சமீப காலத்தில் வரதட்சணைக் கொடுமை அதிகரித்துள்ளது. திருமணம் முடிப்பவர்களுக்கு கட்டில் உட்பட பொருட்களை வரதட்சணையாகத் தர வேண்டும் என்ற மனநிலை இயல்பானதாக அதிகரித்துள்ளது.  திருமணங்களின்போது செய்யும் எளிய சடங்குகளைக் கூட பிரம்மாண் டமாக அதிக செலவில் நடத்துவது என்பதை கௌரவமாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாதி, சடங்கு,  மூடநம்பிக்கைகளில் இருந்து விடுப டுவதற்கு, அதை சுமக்கும் நிலை யில் இருக்கும் பெண்கள், திருமணம்  என்பது தங்கள் வாழ்க்கைத் துணை யைத் தேர்ந்தெடுப்பதாகும் என்ற நிலைக்கு வர வேண்டும் எனக் கூறினர். இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.