tamilnadu

img

பொய்கைப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

பொய்கைப்பட்டி ஊராட்சியில்  சிறப்பு கிராம சபை கூட்டம்

திருச்சிராப்பள்ளி, அக். 12-  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு 404 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், பொய்கைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் சிறப்புரையாற்றினார்.  இக்கூட்டத்தில், இந்த ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகள், வரவு, செலவு கணக்குகள் விவரம் மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மக்களிடம் தெரிவித்து ஒப்புதல் பெறப்பட்டது. பல்வேறு செயல்பாடுகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மணிகண்டம் வட்டம் புங்கனூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலர் நல்லேந்திரன், மகளிர் உரிமை திட்ட அலுவலர் மனோகர், குழந்தை பாதுகாப்பு திட்ட அலுவலர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.