நாகர்கோவிலில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு
நாகர்கோவில், அக். 9- நாகர்கோவில் தலைமை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என்.சிங் அக்டோபர் 9 அன்று ஆய்வு செய்தார். ரயில் பயணிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவில்-திருவனந்த புரம் மார்க்கமாக தொடர் ரயில் சேவைகள் உள்ளன. ஆனால் நாகர்கோவில்-நெல்லை வழியாக ஒரு சில ரயில்களே இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட ரயில் நிலையங்கள் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ளன. குமரி மாவட்டத்திலிருந்து அதிக ரயில்கள் நெல்லை வழி யாக சென்னை உள்ளிட்ட பகுதி களுக்கு இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
