தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு மாநாடு துவங்கியது
தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 36 ஆவது மாநாடு சேலத்தில் சனிக்கிழமையன்று துவங்கியது. இம்மாநாட்டை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே துவக்கிவைத்தார். கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் பி.பி.கிருஷ்ணன், பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஷ்ரா, நிர்வாகிகள் அமானுல்லாகான், கே.வேணுகோபால் ரவீந்திரநாத், வி.ரமேஷ், பி.எஸ்.ரவி, எம்.கிரிஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். (செய்தி - பக்கம் 3)