அரசு ஊழியர் சங்க நிர்வாகி மகன் உயிரிழப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட சென்னை மாவட்ட இணைச் செயலாளர் அன்சர் பாஷாவின் மூத்த மகன் முகமது யாசின் (வயது28) பட்டாபிராமில் பட்டாசு விற்பனை கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, எழுத்தாளர் ஆ.வெண்ணிலா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்வில் சங்கத்தின் மாநில பொருளாளர் சா.டேனியல் ஜெயசிங், நிர்வாகிகள் ம.அந்தோணிசாமி, சிவக்குமார், ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
