எளிய மக்களின் குரலை சமூக ஊடகங்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்!
சென்னை, அக்.5- ஏழை, எளிய மக்களின் குரலை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று இணை யதள வெளியீட்டு விழாவில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வலியு றுத்தியுள்ளார். பியான்ட் ஹெட்லைன்ஸ் முதலாம் ஆண்டு விழா மற்றும் எதிர் நீச்சல் இணையதள துவக்க விழா ஞாயிறன்று (அக்.5) சிந்தாதரிபேட்டையில் நடை பெற்றது. இணையதளத்தை துவக்கி வைத்து பேசிய அ.சவுந்தரராசன், “நேபா ளம், அரபு வசந்தம் போன்ற மிகப்பெரிய போராட் டங்களுக்கு மக்களை திரட்ட சமூக ஊடகங்களே பிரதான மாக இருந்தன. சமூக ஊடகங்களை தொழிலாளி வர்க்க நலனுக்காக பயன் படுத்த வேண்டும். 2014இல் பாஜக வெற்றி பெற சமூக ஊடகம் மிகப்பெரிய பங் காற்றியது. அனைத்து மாநி லங்களிலும் கட்சிகள் சமூக ஊடகங்களை அடியாட்கள் போல் வைத்துள்ளன. சாம்சங் போராட்டத்திற்கு எதிராக அவதூறு பிரச்சாரம் எழுந்தபோது, சமூக ஊடகங்களில் பொதுவான பத்திரிகையாளர்கள், நீதி பதிகள் போன்றோர் தாமாக முன்வந்து தெரிவித்த கருத்துக்கள் போராட் டத்திற்கு பலம் சேர்த்தது” என்று குறிப்பிட்டார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், “விளிம்பு நிலை மக்கள், சாதி, மதத்தால் புறக்கணிக் கப்படும் மக்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல் களை பாதிக்கப்பட்ட வர்களின் பக்கம் நின்று சமூக ஊடகங்கள் விவா திக்க வேண்டும். அரசின் இயலாமை, போதாமை, ஊழல்கள், முறைகேடு களை அம்பலப்படுத்த வேண்டும். வர்க்க நோக்கம் அதில் மறைபொருளாக உள்ளதை வெளிப்படுத்த வேண்டும். தவறான கருத் துக்களை சரியானது போல் மாற்றுவதையும், மத மோசடி களையும் அம்பலப்படுத்த வேண்டும்” என்று வலியு றுத்தினார். தமிழ்நாடு ஊடக நிறுவன இயக்குநர் கே.ஆறு முக நயினார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமேலாளர் எஸ்.சந்தானம் வரவேற்புரை ஆற்றினார். சிஐடியு மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். இணையத்தில் நடக்கும் இரட்டை தாக்கு தல்கள் எனும் தலைப்பில் தமிழ்நாடு டிஜிட்டல் ஜர்ன லிஸ்ட் யூனியன் தலைமை ஒருங்கிணைப்பாளர் இந்திர குமார் தேரடி உரையாற்றி னார். சமூக வலைதளங் களில் அறிவியல் முன்னெ டுப்பு எனும் தலைப்பில் காளிதாஸ் (நாட்டு நடப்பு யூடியூப் சேனல்) கருத்துகளை பகிர்ந்து கொண்டார். ஓராண்டு நிகழ்வுகள் குறித்து இயக்கு நர் கே.சி.கோபிகுமார் விளக்கமளித்தார். இந்நிக ச்சியை ஐஸ்வர்யா (பியான்ட் ஹெட்லைன்ஸ்) ஒருங்கிணைத்தார். இயக்கு நர் எஸ்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.