அரியலூரில் இந்திய மாணவர் சங்கத்தின் ஏழாவது மாவட்ட மாநாடு
அரியலூர், ஜூலை 31- இந்திய மாணவர் சங்கத்தின் 7 ஆவது மாவட்ட மாநாடு, அரியலூரில் ஜூலை 30 ஆம் தேதி, எஸ்.டி மேரீஸ் திருமண மண்டபத்தில் சரோஜினி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டை எஸ்எப்ஐ மாநில செயற்குழு அமுல் காஸ்ட்ரோ தொடங்கி வைத்து பேசினார். வேலையறிக்கை மாவட்டச் செயலாளர் குணா முன்வைத்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரைஅருணன் மாநாட்டை வாழ்த்தி பேசினார் மாநில செயற்குழு சந்துரு நிறைவுரையாற்றினார். மாவட்டத் தலைவராக மாதவன், செயலாளராக சரோஜினி உள்ளிட்ட 21 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.